ரமணர் ஆயிரம்

0 reviews  

Author: பா.சு.ரமணன்

Category: தன்னம்பிக்கை

Available - Shipped in 5-6 business days

Price:  125.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ரமணர் ஆயிரம்

காற்றுக்கு ஒரு தன்மை இருக்கிறது. அது தன்னுடன் இணையும் வாசனைகளுடன் கைகோர்த்துக் கொண்டு, நல்லதோ கெட்டதோ அந்த மணத்தை செல்லுமிடம் எல்லாம் பரப்பியபடி நகரும். தண்ணீரும் அப்படித்தான். அது எந்த மண்ணில் பாய்கிறதோ... அதனோடு எந்தப் பொருள் இணைகிறதோ... அது போலவே மாறிப் போகும். செம்மண்ணில் கலந்தால் செந்நிறமாகும். குப்பையோடு இணைந்தால் சாக்கடையாகும்.

ஆனால் நெருப்பு முற்றிலும் வேறு மாதிரி. இதில் எதைப் போட்டாலும் செரித்துவிடும். இட்ட பொருளின் மிச்சமே இல்லாமல் தனதாக்கிக் கொள்ளும். அருணாசலம் அக்கினி பூமி. பிரபஞ்சத்தின் ஞானபீடம். ஞானத்தேடலின் தாகத்தோடு அலைபவர்கள் எல்லாம் தஞ்சமாவது இந்த மலையிடம்தான். ரமணரையும் ஈர்த்துக் கொண்டது இம்மலை.

சின்னஞ்சிறு பாலகனாய் இந்த அருள்மலையால் அணைத்துக்கொள்ளப்பட்ட இவரது வாழ்க்கையை படிப்பதே ஞான அனுபவம். இவரும் அக்கினித் தன்மையோடு, இவரது அருள் பிரதேசத்துள் நுழைபவர்களை தனதாக்கிக் கொள்கிறார். ‘‘பூப்போட்டு பத்து சுத்து சுத்திவா’’ என்கிற  பரிகார பம்மாத்தெல்லாம் இங்கே இல்லை. ‘‘எங்கிட்ட வந்து கேக்கிறியே... அது வேணும், இது வேணும்னு கேட்கிறியே... இதை கேக்கறது யாருன்னு நீயே கேட்டுக்கோ’’ எனச் சொல்லி ஒவ்வொருவரும் தனக்குள்ளே நகர... பார்க்க... உள்முகமாகத் திரும்ப அருள்கிறார்.

இந்தக் கேள்வி... ‘நான் யார்?’ என்கிற அணுவின் மையம் போன்ற வார்த்தை, கடவுளை... நம் கடவுள் தன்மையை... நமக்குள் மலரச் செய்து விடும். உலகமே கேட்டுக் கொள்ள வேண்டிய இந்தக் கேள்வியை, சலனமே இல்லாத அருணையின் அடியில் அமர்ந்தபடி இந்த ஞானசூரியன் அனைவருக்குள்ளும் விதைத்து வருகிறது.

இந்த புத்தகம் நம்முள் ‘நான் யார்’ என்கிற கேள்வியைக் கேட்கும்போது, ரமணர் என்கிற சக்தி நம் கரம் பிடித்து அந்த ராஜவீதியில் நடத்திச் செல்லும். நம் கொந்தளிக்கும் மனக் கடலுள் அமுதம் பெருகும்!

ரமணர் ஆயிரம் - Product Reviews


No reviews available