புவி சூடேற்றம் (ஒரு விரிவான அறிமுகம்)
புவி சூடேற்றம் (ஒரு விரிவான அறிமுகம்)
‘புவி சூடேற்றம்’ (Global warming) மிகவும் குழப்பமாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள ஓர் அறிவியல். கடந்த 50 ஆண்டுளாகப் புவி சூடேற்றம் என்ற சொல் நம்மிடையே விவாதிக்கப்படும் ஒரு தலைப்பாக மாறி இருக்கிறது.
‘பூமி வெப்பமயமாதல்’ எப்படிப் பல படிகளைத் தாண்டி வந்துள்ளது என்பதைப் பற்றியும், பருவநிலை மாற்றத்தைப் (climate change) பற்றியும் இந்தப் புத்தகத்தில் விரிவாக அலசப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல் பற்றிய புரிதலில் நமக்கு இருக்கும் குறைபாடுகள், வியாபார நோக்கோடு செய்யப்படும் திரித்தல்கள் ஆகியவற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சும் இந்தப் புத்தகம், நாம் வாழும் இந்தப் பூமியின் தன்மையைச் சமநிலை குலையாமல் பார்த்துக் கொள்வதற்கான தீர்வுகளையும் தருவது சிறப்பு.
அறிவியல் ஆய்வு நூல்களை எளிமையாகவும் சிறப்பாகவும் எழுதி வரும் ரவி நடராஜனின் இரண்டாவது படைப்பு இது. இவரது முதல் நூல், ‘அறிவியல் திரித்தல்கள்’.
புவி சூடேற்றம் (ஒரு விரிவான அறிமுகம்) - Product Reviews
No reviews available

