பூவாயி நாச்சியார்
பூவாயி நாச்சியார்
இன்றைய இயந்திர உலகில் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அருகி வருவதாகவே காணப்படுகிறது. இதற்கான காரணங்களில் மக்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு நகரங்களுக்குக் குடி பெயர்வது, வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்வது ஆகியன மிகவும் குறிப்பிடத்தக்கன. சிலர் தங்களின் குலதெய்வங்களின் பெயரே தெரியாமலும் உள்ளனர்.
இந்தக் குலதெய்வம் என்பதை வெறும் வழிபாட்டுச் செய்தியாக மட்டும் கருதி விடாமல், அதனை நம் முன்னோர்களது வரலாறாகவும், நாம் யார் என்று அறிந்து கொள்ள உதவும் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியாகவும் நாம் கருத வேண்டும்." நமக்கான வரலாறு இல்லாவிட்டால் நம் வரலாறும் தெய்வங்களும் மறக்கப்படும்! அழிக்கப்படும்! இறக்கப்படும்! நம் தெய்வங்களின் இறப்பு தமிழ் இனம் என்கிற அடையாளத்தின் இறப்பு! கலாச்சாரத்தின் இறப்பு! என்னும் இந்நூலாசிரியரின் கருத்து, நம் குலதெய்வம் பற்றி ஏன் நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதைச் செவ்வனே உணர்த்தும்.
கன்னி தெய்வமான பூவாயி நாச்சியாரின் வரலாற்றோடு, இன்றைய காலத்தைச் சேர்ந்த இக்கதை நாயகனின் கதை இணைந்து சுவைபட அமைந்துள்ள இக்கதையில் பெண் சுதந்திரம், பெண் விடுதலை, பெண்கள் பாதுகாப்பு எனப் பெண்ணியம் சார்ந்த பல கருத்துகள் பேசப்பட்டுள்ளன. மேலும் கால இயந்திரம் என்ற கற்பனையும் இக்கதைக்குச் சுவை சேர்ப்பதாக இடம்பெற்றுள்ளது. இக்கதையைப் படிப்போரது உள்ளத்திலும் இல்லத்திலும் பூவாயி நிச்சயம் குடிபுகுவாள்.
பூவாயி நாச்சியார் - Product Reviews
No reviews available

