பனங்காய் மயிலை

0 reviews  

Author: சு.வேணுகோபால்

Category: குறுநாவல்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  220.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பனங்காய் மயிலை

எமது பதிப்பகம் இளையவர்களுக்கானது, புதிய முகங்களை அறிமுகப்படுத்துவது அதன் பிரதான நோக்கங்களில் ஒன்று...

அதே சமயம் நாங்கள் வாசித்த பிரமித்த எங்களையும் எழுதத் தூண்டிய எழுத்தாளுமைகளின் படைப்புகளை வெளியிடுவது என்பது எங்களுக்கு கிடைக்கும் விருதைப் போன்றது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அப்படியான ஒரு விருதாக மதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு.சு.வேணுகோபால் அவர்களின் ‘பனங்காய் மயிலை’ குறுநாவல் தொகுப்புடன் இந்தப் புத்தகக்காட்சியின் வாடிவாசலுக்குள் காலடி எடுத்து வைக்கிறோம்....

/பனங்காய் மயிலை மற்றும் இரண்டு குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு இது.

இந்த தொகுப்பில் பேசப்படும் கதையில் மண், மனிதன், மாடு ஆகியவற்றுக்கிடையிலான உறவு ஒரு கலாச்சார வரலாறு. தென்னகக் கிராமங்களின் உடல் உழைப்பு, திருவிழா, வன்மம், பெருமை, இழப்பு, காத்திருக்கும் மரணம் அனைத்தும் அவருக்கே உண்டான படிம மொழியில் புதிய அனுபவத்தைத் தரும்.

ஜல்லிக்கட்டு, கிடை, வாடி,களம்பு, உடுக்கையோசை, இருள் - விடியல் என பின்னணியாக, மனிதனின் அகம்பாவமும் பயமும் ஒரே நேரத்தில் மோதுகின்றன. அரிதாகச் சொல்லப்படும் கிராம வாழ்க்கையின் அடுக்குகளை, சு.வேணுகோபால் உணர்ச்சி அலங்காரம் இன்றி, துல்லியமான மொழியால் முன்வைக்கிறார்./

பனங்காய் மயிலை - Product Reviews


No reviews available