நீலப்படம்
நீலப்படம்
தனது அருவருப்புகளும் கீழ்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தபின் ஒரு மனிதன் இழப்பதற்கு எதுவுமில்லை. அவமானங்களும் தண்டனைகளும் அவனைக் காயப்படுத்துவதில்லை. என் நினைவுகளை அழித்ததன் மூலம் நீண்டகாலம் எனக்குள் ஊர்ந்த புழுக்களைக் கொன்றுவிட்டாய். எனது காயங்களின் குருதி இப்போது பூக்களாகியிருக்கின்றன. குருதியில் நனைந்த மலர். அழிவற்ற அந்த மலரை உனது வெற்றிக்கான அடையாளமாக சூட்டிக் கொள்வாயா கண்மனி? இந்த பூக்கள் உன்னை எப்போதும் பின் தொடரும். எனது நினைவுகளிலிருந்து நீ தப்பிக்கிற போதெல்லாம் குருதியும் நிணமும் கசியும் வாசணையால் நீ தூண்டப்படுவாய். லாகிரி வஸ்துக்களின் உதவிகளோடு நீ கடந்து செல்ல நினைத்தால் உறக்கமற்ற பேயாய் என்னைப் பற்றிய நினைவு உன்னைச் சுற்றியலையும். வாதையின் வழியாய் என்னை நீ விடுதலை செய்ததைப் போல் உன்னை யார் விடுதலை செய்யக்கூடும்?
நீலப்படம் - Product Reviews
No reviews available

