நான் ஏன்?

0 reviews  

Author: ரா.கி.ரங்கராஜன்

Category: சுயமுன்னேற்றம்

Available - Shipped in 5-6 business days

Price:  140.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நான் ஏன்?

தமிழ் படைப்புலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமற்ற பிரபல பெயர் ரா.கி.ர சிறந்த எழுத்தாளர்  மொழிப்பெயர்ப்பு கலையில் வல்லமை உடையவர் மூலக்கதையின்  சாரம்  குறையாமல் அவற்றை அதே விறுவிறுப்புடன்  தமிழுக்குத் தருவதில்  ரா.கி.ரகைதேர்ந்தவர்  என்பதற்கு  படபடப்புடன் சிறகடித்த பட்டாம்பூச்சியே  சாட்சி  எப்படி கதை எழுதுவது என்ற இவரது புத்தகம் அறிமுக எழுத்தாளர்களுக்கு  சிறந்த வழிகாட்டி

பாரம்பரியமிக்க  பத்திரிக்கைகளில்  எழுதிப் புகழ்பெற்ற  புலனாய்வு  வாரமிருமுறை இதழில் எழுதிய "நீங்களும் முதல்வராகலாம்" தொடர் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன்  புத்தகமாகவும்  வெளிவந்து  விற்பனையில் வெற்றி பெற்றது  மனித உணர்வுகளை புரிந்துகொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்  மேல்நாட்டு பாணி எழுத்துகளை தமிழ்நடைக்கு ஏற்றவாறு தருவதில்  ரா.கி.ரவை விஞ்ச ஆளில்லை

ஒற்றையடிப்பாதையில் கைப்பிடித்து அழைத்து செல்லும்  தந்தையைப்போல்  வாசகர்களை  முன்னேற்ப் பாதை நோக்கி ரா.கி.ர தன் எழுத்துகளால்  அழைத்துசெல்கிறார்  கார் வைத்திருக்கும் முதலாளி  முதல் காரை  ஒட்டும் டிரைவர் வரை யாராக இருந்தாலும்  கல்லூரி மாணவி முதல் ஒய்வு பெற்ற  அதிகாரி  வரை எந்த வயதினராக  இருந்தாலும் பிரச்சினைகளை தீர்த்துவிடும் இந்தப் பேராசிரியரின் வார்த்தைகள் ஒவ்வொரு வாசகரின்  முன்னேற்றப்பாதைக்கும் பயனுள்ளதாக இருக்கும்

நான் ஏன்? - Product Reviews


No reviews available