முகா முகம்
முகா முகம்
கவிஞராகவும் புலனாய்வுப் பத்திரிகையாளராக வும் அறியப்பட்ட நட்சத்திரன் செவ்விந்தியனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது.
ஈழப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் எழுதப்பட்ட ஆறு கதைகளைக் கொண்ட இத் தொகுப்பின் ஆதாரமாக அமைந்திருப்பவை போரும் புலம்பெயர்வும். இந்த வகைமையில் பல நூறு கதைகள் வெளிவந்திருப்பினும் நட்சத்திரனின் கதையுலகம், சொல்முறையி லும் புனைவுக் கட்டமைப்பிலும் தனித்துவம் கொண்டது.
இக்கதைகள் லட்சியங்களின் மூலம் கட்டமைக்கப்படும் வரலாற்றையும் பிம்பங்களையும் கலைக்க முயற்சிப்பவை; கூடவே மாற்று வரலாற்றையும் கட்டமைப்பவை. சமகால அரசியலை எளிய மொழியில் பகடியாகவும் எள்ளலுடனும் சித்தரிப்பவை.
அமைப்புகள்மீதான அவநம்பிக்கை, தோல்வி, ஏமாற்றம், விரக்தி, கைவிடப்படுதல், உணர்வழிவு போன்ற பல்வேறு தளங்களில் நகர்ந்தாலும் இறுதியில் இணக்கத்தையே இக்கதைகள் இறைஞ்சுகின்றன.
முகா முகம் - Product Reviews
No reviews available

