மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும்

0 reviews  

Author: பா.ஜீவசுந்தரி

Category: வாழ்க்கை வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும்

அம்மையார் குழந்தையாக இருந்தபோது தாசியிடம் விற்கப்பட்டது, வறுமையினால் பெற்றோர் இவரைக் கைவிட்டது, இதனால் இவர்சந்தித்த வறுமை, வன்முறை, அம்மையாரின் அபரிமிதமான சங்கீத மற்றும் சமஸ்கிருதப் பலமை, புராணங்கள், இந்து மதம் குறித்த அவரின் ஆழ்ந்த அறிவு. பிற்காலத்தில் இவை அனைத்தும் அவர் இந்து மதத்தைத எதிர்க்க உதவியமை, அம்மையாரின் கணவர் சுயம்புப்பிள்ளை குறித்த சில வரலாற்றுத் தகவல்கள் என இந்நூலின் மூலம் நமக்களிக்கப்பட்டுள்ள விவரங்கள் இதுவரை எங்குமே கிடைக்கப் பெறாதவை. அதே போன்று, இராமாமிர்தம் அம்மையார் எப்பொழுது, எதற்காக காங்கிரஸில் சேர்ந்தார்? பின்னர் எதனால் காங்கிரஸை விட்டு விலகினார் என்ற விவரங்கள் இதுவரை நாம் அறியப்படாதவை. அவற்றை அம்மையாரின் கையெழுத்துப் பிரதியான எனது வாழ்க்கை சரித்திரத்திலுந்து பெறப்பட்டு ஒரு வரலாற்று விமர்சன நோக்கில் ஜீவசுந்தரி நமக்களித்துள்ளார். அம்மையார் மூவலூரில் கூட்டிய முதல் இசை வேளாளர் மாநாடு பற்றியும், அம்மையாரின் காங்கிரஸ் இயக்கச் செயல்பாடு குறித்தும் சுவையான தகவல்கள் இந்நூலில் விரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. முனைவர் ச.ஆனந்தி

மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் - Product Reviews


No reviews available