மூதோர் காதை

0 reviews  

Author: அ.முத்துவிஜயன்

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  180.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மூதோர் காதை

தமிழ் இலக்கிய உலகில், சங்க காலம் முதல் சித்தர்கள் காலம் வரை வாழ்ந்த ஔவையார், திருவள்ளுவர், சிவவாக்கியார் போன்ற மூத்த புலவர்களின் பாடல்களையும், குறள்களையும், சித்த வரிகளையும் மையமாக வைத்து பல சிறுகதைகளையும் நாவல்களையுமே எழுதிவிட முடியும். காரணம் அவ்வளவு சம்பவங்கள் அதற்குள் ஒளிந்து கிடக்கும். இத்தகையப் பாடல்களையும் குறள்களையும் சுதைகளாக்கும்போது, பாடல் உணர்த்தும் ஆழ்ந்த தத்துவத்தை எளிய மனிதர்களின் வாழ்வியலோடு பிணைத்துக் காட்டவும், இலக்கியமும் தத்துவங்களும் எளிய மனிதர்களுக்கும் சமூகத்திற்கும்தான் என எடுத்துக்காட்டவும் இயலும்.
அந்தவகையில் கடினமான அல்லது ஆழ்ந்த செய்யுள் வரிகளை, அன்றாட வாழ்க்கைச் சம்பவங்கள் மூலம் பாமரரும் புரியும் வண்ணம் எடுத்துச்சொல்லவும், பண்டைக் காலத்துப் புலவர்கள் சொன்ன அறநெறிகள் இன்றைய நவீன உலகிற்கும் எப்படிப் பொருந்துகிறது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டவும் கதைகளாக்கியிருப்பதே 'மூதோர் காதை' எனும் நூல்.
ஜின்னா அஸ்மி, பதிப்பாளர்

மூதோர் காதை - Product Reviews


No reviews available