மரண ஜீவிதம்
மரண ஜீவிதம்
கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ கட்டுரைத் தொகுப்பு மூலம் பரவலாக அறியப்பட்ட திருக்குமரன் கணேசனின் கதைகள் இவை.
தஞ்சாவூர் வட்டாரக் கிராம மக்களின் வாழ்க்கையே இவருடைய கதைக்களம். அம்மக்களின் பேச்சுவழக்கிலிருந்து தனது மொழியை எடுத்துக்கொண்டிருக்கிறார்.
திருடர்கள், வைத்தியர்கள், தனது நூறாவது என்கவுண்டராகத் தன்னைத் தானே சுட்டுக்கொள்ளும் காவல்துறை அதிகாரி என வித்தியாசமான கதாபாத்திரங்களின் வழியாக மட்டுமல்லாமல் டைகர்-ரோஸி என்கிற நாய்களின் வழியாகவும் தஞ்சை மண்ணின் அன்பையும் அரவணைப்பையும் துயரத்தையும் சொல்கிறார் திருக்குமரன். திரைப்படக் காட்சிகளைப் போல அமைந்திருக்கும் இக்கதைகளின் சம்பவங்களும் உரையாடல்களும் சிறந்த காட்சி அனுபவத்தையும் தருகின்றன.
‘மனித மனங்களை நம்மால் அளவிடவே முடியாது. இந்தக் காலம் தரும் பெரும் துயரங்களையும்தான்’ என்று தனது கதைகளின் மூலம் சொல்லும் திருக்குமரன் கணேசனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது.
மரண ஜீவிதம் - Product Reviews
No reviews available

