மணல் உயிர்
மணல் உயிர்
இயற்கையின் மீது கவனமும் பொறுப்பேற்றுக் கொள்ளும் தன்மையும் மிகுந்த கவித்துவ வெளியானது ஒரு அனாதையைப் போல திரியும் தன்மையையும் சேர்த்தேதான் தனக்குள் வைத்திருக்கிறது. ஒரு பக்கம் ஞானியை போன்றதொரு அந்நியமும் மறுபக்கம் இருத்தலியில் சார்ந்த அழகியலும் இன்னொரு பக்கம் தீரா காதலின் மௌனங்கள் பொருள் தேட்டங்கள் போன்றவற்றையும் பேசியபடியே தான் இவ்வாழ்வைக் கடக்க வேண்டியிருக்கிறது.
இந்த வாழ்வு இனியும் இப்படித்தான் இருக்கும் என்பதற்காக அந்நியப்பட்ட மறைந்து போன காம்யூவின் மேலைப் பார்வை கிடையாது நமது அன்றாடம். இந்த வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் சகித்து அதற்கு ஒரு பண்பு நிலைப்பாட்டைத் தந்து விட்டுச் செல்ல வேண்டியது முக்கியம். கீழைத்தேய வாழ்வின் நம்பிக்கைகளோடுதான் மணல் உயிர் என்கிற இந்தக் கவிதைத் தொகுப்பின் மூலம் நம்மோடு உரையாடுகிறார் சீனு ராமசாமி.
கவிஞர் யவனிகா ஸ்ரீராம்
மணல் உயிர் - Product Reviews
No reviews available

