மம்மர் அறுக்கும் மருந்து
Price:
350.00
To order this product by phone : 73 73 73 77 42
மம்மர் அறுக்கும் மருந்து
கல்விப் பிரச்சினைகள் பலவாக இருப்பினும் அவற்றைப் பற்றி பொதுவெளியில் பேசுவோர் குறைவு. ஒப்பீட்டளவில் பள்ளிக்கல்வியைப் பற்றிய எழுத்துக்களும் பேச்சுக்களும் கணிசமாக இருந்த போதிலும் உயர்கல்வி குறித்தவை அவ்வளவு இல்லை. அக்குறையைப் போக்கும் வகையில் தொடர்ந்து உயர்கல்விச் சிக்கல்களைப் பேசியும் எழுதியும் வருபவர் பெருமாள்முருகன். தமிழ் இலக்கிய மாணவராகப் பல நிறுவனங்களில் பயின்று அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் தம் அனுபவத்தைக் கலந்து உயர்கல்வி குறித்து வெளிப்படப் பேசியுள்ள நீண்ட நேர்காணல் தொகுப்பு இந்நூல். ஜப்பான் தோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் வேதியியல் ஆராய்ச்சியாளராக இருக்கும் சா. விஜயகுமார் இதற்கான கேள்விகளை உருவாக்கி உள்ளார்.
மம்மர் அறுக்கும் மருந்து - Product Reviews
No reviews available

