மைலோ & பிற கதைகள்

0 reviews  

Author: உமா கதிர்

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  220.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மைலோ & பிற கதைகள்

உமா கதிரின் முந்தைய தொகுப்பில் இடம்பெற்றிருந்த 'களப எயிறு' கதையில் வரும் யானையின் பெயர், 'பத்தி ஹர்ன்'. இதற்கு தாய்லாந்து மொழியில் 'அற்புதம்' என்று பொருள். யானையின் பேராகிருதி போன்றே, நிலமதிர அசைந்தாடி நடக்கும்போது அனாயாசமாக துதிக்கை வீசும் கனதோரணை போன்றே, தமிழின் சிறந்த கதைகளில் ஒன்றாக அந்தக் கதை உருவாகியிருக்கிறது. அதையும் ஒரு 'பத்தி ஹர்ன்' எனலாம்.

இத்தொகுப்பின் கதைகளை முன்னர் வாசிக்கும்போதே, அவற்றின் பெருந்தச்ச அம்சங்களை இனங்கண்ட ஆனந்தம் எனக்கு. இப்போது மீண்டும் வாசிக்கும்போதும் உமா கதிர் நிறைவைக் கொண்டுவருகிறார். இந்த வெளிப்பாடுகளின் வீழ்படிவாக மனதில் ஒளிரும் அவரது கலா ஆளுமை, இவற்றைப் போன்ற இன்னும் பலவற்றுக்காக காத்திருக்க அறிவுறுத்துகிறது.

மைலோ & பிற கதைகள் - Product Reviews


No reviews available