குதிரை முட்டை

குதிரை முட்டை
மேடையில் நிகழ்த்தப்படும் நாடகத்தின் பிரதி, நாடகத்தின் சில பரிமாணங்களை மட்டுமே காட்டுகிறது. நாடகாசிரியரின் மனதில் உருவாக்கிய படைப்பின் பொறி, பிரதியாக்கத்திலும் பயிற்சிக் களத்திலும் வலுபெற்று உருப்பெரும் ரசவாதம் பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதில்லை. பல்வேறு இடங்களில் பல தரப்பட்ட பார்வையாளர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டுத் தன்மைப் புதுப்பித்துக்கொள்ளும் நாடகத்தின் வண்ணங்கள் அற்புதமானவை. ஒரு நாடகத்தின் பிரதி, அது குறித்த விமர்சனப் பதிவுகளுடனும் கலைஞர்களின் அனுபவப் பதிவுகளுடனும் பதிவாவது அரிதாகவே நிகழ்கிறது. மதுரை நிகழ் நாடக மய்யத்தின் குதிரை முட்டை நாடகம் குறித்த இந்த நூல் அத்தகைய அரிதான பதிவு. தீவிரமானது. சுவராசியமானது. வாசிப்பைத் தூண்டக்கூடியது.
சுகுமாரன், சே. இராமானுஜம், அ. ராமசாமி, பி.ஏ. கிருஷ்ணன், பிரேம், பெருமாள் முருகன் போன்றவர்களின் கட்டுரைகளை உள்ளடக்கியத் தொகுப்பு.