குஞ்ஞுக்காளியின் குலவை
Author: ஜெயலெக்ஷ்மி, தமிழில்: சிவன்
Category: வாழ்க்கை வரலாறு
Available - Shipped in 5-6 business days
குஞ்ஞுக்காளியின் குலவை
‘குஞ்ஞுக்காளியின் குலவை’ – ஒரு தலித் பெண்ணின் போராட்டமான வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்கிறது.
இல்லற வாழ்வின் அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும், சமூகத்தின் அழுத்தங்களுக்கும் அடிப்பணிந்து, அனைத்து இன்னல்களையும் அவமானங்களையும் எதிர்கொண்டு வாழ்கிறாள் குஞ்ஞுக்காளி.
பூரணமான அன்பு, தியாகம், பெண்மையின் உறுதி – இவற்றின் எதிரொலியே குஞ்ஞுக்காளியின் குலவைகள்.
மனித உணர்வுகளின் ஆழங்களை இந்த நாவலில் அழகாகத் தொட்டுச் சென்றிருக்கிறார் நூலாசிரியர் ஜெயலெக்ஷ்மி.
மலையாளத்தில் பெரும் வரவேற்பு பெற்ற இந்த நூல், சிவனின் கச்சிதமான மொழிபெயர்ப்பில் தமிழில் வெளியாகிறது.
***
Translation of Kunjikkalikkurava - Malayalam.
Cover illustrations: Prasannan Anickad
***
ஜெயலெக்ஷ்மி
கொல்லம் சாஸ்தாங்கோட்டை D.B.கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் பராமரிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவர். குறிப்பாக, கொல்லம் மாவட்டத்தின் முக்கியக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நன்னீர் ஏரியான சாஸ்தாங்கோட்டை ஏரியைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும் போராடுவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
Railway Recruitment board (TVC)-இன் தலைவராகவும், ராஷ்ட்ரிய மஹிளா கோஷ்-இன் (RMK) இயக்குநராகவும், தென்மண்டல நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்தின் (கேரளா) ஜூரி மெம்பராகவும் இருந்துள்ளார்.
கேரள மாநில மகளிர் வளர்ச்சிக் கழகத்திலும் (Kerala State Women's Development Corporation) N C E R T-இலும் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
Auld lang Syne என்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு 2022ம் ஆண்டின் சிறந்த சிறுகதைக்கான ‘மாதவிகுட்டி விருது' கிடைத்துள்ளது.
ஷார்ஜா புத்தக விழாவில் வெளியான 'குஞ்ஞுக்காளிகுரவா' நாவலுக்கு (தமிழில்: 'குஞ்ஞுக்காளியின் குலவை') பிரவாசி பாரதிய சங்கத்தின் உயரிய விருதான 'டாக்டர் சுகுமார் அழிக்கோடு தத்வமஸி' விருது (சிறந்த நாவல்) கிடைத்துள்ளது.
***
சிவன்
இயற்பெயர் P.B. சிவசுப்ரமணியன். மதுரை பெரியகுளத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். ஆனந்த விகடன், முத்தாரம், அமுத சுரபி, பேசும்படம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி தமிழ்ப் பத்திரிகைகளில் பணிபுரிந்திருக்கிறார். ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிப் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இவரது மொழிபெயர்ப்பில் 120க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இதுவரை தமிழில் வெளியாகி இருக்கின்றன.
BOFTA திரைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்காற்றி இருக்கிறார்.
குஞ்ஞுக்காளியின் குலவை - Product Reviews
No reviews available

