குஞ்ஞுண்ணி கவிதைகள்
குஞ்ஞுண்ணி கவிதைகள்
குஞ்ஞூண்ணியின் கவிதைகள், கொஞ்சம் பழமொழியும் விடுகதையும் கலந்தாற்போன்ற தன்மையை ஏற்படுத் தினாலும், வலுவான சிந்தனைத் தெறிப்புகள் அவற்றிலுண்டு பொதுச் சமூகத்தின் மனநிலையைக் கேள்விக்குட்படுத்தி, சின்னப் புன்முறுவலையேனும் நம்மிடமிருந்து வரவழைத்துவிடுவார்.
எதையெடுத்தாலும் கேள்வியெழுப்புவதை அவர்
வாடிக்கையாக வைத்திருக்கிறார். கேள்வியைத் தவிர்க்கும் மனம் அவரிடம் இல்லவே இல்லை. விடையளிக்க முடியாத கேள்விகளின் சதுராட்டத்தை
நிகழ்த்துவதுதான் குஞ்ஞுண்ணியின் கவிதைமுயற்சியும்.
ஆன்மிகத் தேடலிலுள்ள அவருடைய வாழ்க்கைச் சிந்தனை, வேதாந்தத்தின் சாரத்தையும் அதற்கு எதிரான திசையையும் காட்டுகின்றது. கூடையைக் கொட்டிக் கவிழ்க்கிறேன் தேவையானவற்றை எடுத்துக் கொள் என்பதுபோலத்தான்.
உள்ளே ஆவேசமும் வெளியே ஆகாசமும் உள்ளவரை, குஞ்துண்ணியும் என்னுடனே இருப்பார்.
யுகபாரதி
குஞ்ஞுண்ணி கவிதைகள் - Product Reviews
No reviews available