கோயிலுக்குள் நுழையாதே
கோயிலுக்குள் நுழையாதே
1897இல் கமுதி கோவிலுக்குள் நாடார்கள் நுழைந்து வழிபாடு நடத்தியதை எதிர்த்து, ராமநாதபுரம் ஜமீன்தார் பாஸ்கர சேதுபதி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இது ஆகம விதிகளுக்கும், நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் ‘சுத்த-அசுத்த’ கோட்பாடுகளுக்கும் எதிரானது என்பது புகார்தாரரின் வாதமாக இருந்தது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து லண்டனில் உள்ள பிரிவி கவுன்சில் வரை சென்றது. கோவில் வழிபாட்டு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்களின்படி, நாடார்களுக்குக் கோவிலுக்குள் நுழைவது ‘கோவிலைத் தீட்டுப்படுத்தும்’ செயலாகும் எனக் கூறி, அவர்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி இல்லை என்று நீதிமன்றம் 1899ல் தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பு நாடார் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுவே பிற்காலத்தில் ‘கோவில் நுழைவுப் போராட்டம்’ மற்றும் ‘வைக்கம் சத்தியாகிரகம்’ போன்ற சமூக நீதி இயக்கங்கள் தீவிரமடைய அடித்தளமாக அமைந்தது.
அன்றைய சமூக நிலைப்பாடுகளைப் புறவயமாகப் பார்ப்பதற்கு வாய்ப்பாக கமுதிக் கோயில் நுழைவு வழக்கின் தீர்ப்பைப் பக்கச்சார்பின்றித் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார் ப்ரவாஹன்.
கோயிலுக்குள் நுழையாதே - Product Reviews
No reviews available

