கொய்யாச் சித்தர்
கொய்யாச் சித்தர்
வணிகம், வானிலை. விளையாட்டுத் துறை எனப் பல்வேறு துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடும் கூர்மையான அவதானிப்புகளும் கொண்டவர் சரவணன் சந்திரன். எந்த வகைக் களமானாலும் அது வலுவான சூழமைவையும் தீவிரமான உரிப்பொருளையும் கொண்டிருக்கிறது. அந்தத் தீவிரம் பாசாங்கானதாகவோ இறுக்கமானதாகவோ அல்லாமல் மிக இலகுவான மொழியில் அலட்சியத் துடன் கையாளப்படுகிறது. அத்தகைய விட்டேற்றித்தனமே அவரது பலம். சரவணன் சந்திரனின் கட்டுரைகளில் இந்த விலகல்தன்மையைக் கவனிக்கலாம். தனது கருத்தை வெளிப்படையாக எங்கும் திணிக்கமாட்டார். ஒன்றை அழுத்தமான கருத்தாக மாற்ற முயல மாட்டார். இப்படி நடக்கிறது. நடைமுறை இப்படி இருக்கிறது எனச் சுட்டிக்காட்டி நகர்ந்துவிடுவார். உண்மை என்னவோ அதை மட்டும் குவிமையத்தில் வைத்திருக்கும் மனம். குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடும் பக்குவம்.
மிக வேகமாக எழுதக்கூடியவர். ஒற்றைக்கால் கொக்கு போலத் தவமிருக்கிறவர். செயல்துடிப்பும் கற்பனை வளமும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர். ஓர் எழுத்தாளருக்கு இலக்கியத்தைத் தாண்டி வெவ்வேறு துறைகளில் நாட்டம் இருப்பது எழுத்துக்கு வலுசேர்க்கும் என்பதற்கான சாட்சியம் இந்நூல்
கொய்யாச் சித்தர் - Product Reviews
No reviews available

