கெங்கம்மா
கெங்கம்மா
புனிதஜோதி
கவிஞர், பேச்சாளர், எழுத்தாளருமான செ. புனிதஜோதி ஆண்டிபட்டியில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். மூன்று கவிதைத் தொகுப்புகளையும், ஒரு கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
'சுப்புவின் கனா மகள்' கவிதைத் தொகுப்புக்கு நவீன கலை இலக்கிய மேடையின் அசோகமித்திரன் படைப்பூக்க விருது பெற்றுள்ளார். 'மௌனக்கூத்து' கவிதைத் தொகுப்புக்கு சௌமா விருது கிடைத்துள்ளது. இதுவரை 16-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். காலச்சுவடு, ஆனந்த விகடன். கணையாழி, குமுதம், தமிழ் வெளி, தாமரை, கவிதை உறவு. இனிய உதயம், மகாகவி, வாசக சாலை, காற்று வெளி உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார்.
டொம்பர் குலத்தில் பிறந்து, தன் இனத்தின் கண்ணியத்தை மீட்டெடுக்கப் போராடும் வலிமைமிகு பெண் கெங்கா, சாதி ஒடுக்குமுறை. பொருளாதாரச் சுரண்டல், முதலாளிகளின் பாலியல் கொடுமைகள், கூலி ஏமாற்றங்கள். அடிப்படை உரிமை மறுப்புகள்... இவை அனைத்துக்கும் எதிராக அவள் எழுந்து நிற்கிறாள். தன் சமூகத்தை ஒருங்கிணைத்து, தொழிலாளர் இயக்கங்களோடு இணைந்து, குரலற்றவர்களின் குரலாக நின்று போராடுகிறாள்.
தண்ணீர்ப் பஞ்சம், சாதி வெறுப்பு, தொழிலாளர் சுரண்டல் நிறைந்த காலகட்டத்தில் நடக்கும் கெங்காவின் போராட்டம் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எழுச்சிக்கான சாத்தியத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு காலத்தில் ஓடைப்பகுதியில் குடிசைகளில் வாழ்ந்த மக்கள். இன்று கல் கட்டிடங்களில் வாழ்கிறார்கள். இந்த மாற்றத்தின் பின்னணியில் கெங்காவின் அசைக்க முடியாத நம்பிக்கையும் போராட்டமும் இருக்கிறது.
'என் ஊரில் கண்டதை. கேட்டதை வேறு யார் எழுத முடியும்?' எழுத்தாளர் இமயத்தின் இந்த வார்த்தைகளால் ஊக்கமடைந்து, புனிதஜோதி உண்மையையும் கற்பனையையும் இணைத்துப் படைத்திருக்கும் இந்த நாவல், நமது சமூகத்தின் மௌனமான வலிகளையும் எதிர்காலத்தின் நம்பிக்கையையும் சக்திவாய்ந்த முறையில் சொல்கிறது.
கெங்கம்மா - Product Reviews
No reviews available

