கருப்பையா ஓர் அந்தாதி
கருப்பையா ஓர் அந்தாதி
முதல் படைப்பான 'கூத்தனாச்சி' நாவலுக்காக எழுதிரள். அமைப்பு மூலமாக தமிழ்த்தேசிய இளம் இலக்கியர் விரு திரு செந்தமிழன் சீமான் அவர்களால் கொடுக்கப்பட்ட பிறகு எனது இரண்டாம் படைப்பாக வெளியாகியுள்ள நாவல் இது.
சமூகத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைக் கதைக்களமாக்கி, 'நாம் கவனிக்கத் தவறும், கவனித்தும் நம்மால் புறக்கணிக்கப்படும் மனிதர்களை கதை மாந்தர்களாக்கி உலாவ விட்டுள்ளேன். சமூகத்தால், உறவுகளால், ஏன் கடவுளால் கூட கைவிடப் பட்டவர்களை கதையின் நாயகர்களாக்கி அவர்களுக்கான நியாயங்களையும் உணர்வுகளையும் வாழ்க்கையையும் கதையோட்டமாக்கியுள்ளேன். சில இடங்களில் நம் மனசாட்சி நம்மைக் கேள்வி கேட்கும். நாமே நம்மை சுய பரிசோதனை செய்து கொள்வோம்.
என்றோ அறியாமையால் செய்த தவறுக்கு. காலம் முழுக்க சுமை தாங்கும் ஒரு முதிர்ந்த மனநிலையும், சமூகத்தில் நிகழும் அவலங்களைக் கண்டு மாற்றத்துடிக்கும் ஒரு குற்றவாளியின் மனநிலையும் ஒருசேர பயணிக்கும். செய்த தவறை முழுதாக உணர்ந்து தண்டனை வேண்டி நிற்கும் ஒருவனுக்கு மன்னிப்பை விட பெரிய தண்டனை கிடையாது என்பதையும் நீங்கள் உணரலாம்.
கருப்பையா ஓர் அந்தாதி - Product Reviews
No reviews available

