கல்வியே அழியாச் செல்வம்
Author: தமிழ்ச்செம்மல் முனைவர் க.கோபாலகிருஷ்ணன்
Category: கட்டுரைகள்
Available - Shipped in 5-6 business days
கல்வியே அழியாச் செல்வம்
பேராசிரியர் முனைவர் க. கோ (எ) கோபாலகிருஷ்ணன் அவர்கள் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் முதல் தொகுதியாம் குளித்தலை தொகுதியில் வைகநல்லூர் கிராமம் புதுப்பாளையத்தில் கருப்பண்ணன் மாணிக்கம் அம்மாள் தம்பதிக்குப் பிறந்தவர். பள்ளிப் பருவத்தில் இருந்தே பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி பட்டிமன்றம் போன்றவற்றில் கலந்து பல பரிசுகளைப் பெற்றுள்ளார். 2009 இல் தேசியக் கல்லூரியில் முதகளை மாணவனாக பாவேந்தர் பாரதிதாசன் ஒப்பித்தல் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்று அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களிடம் பரிசு பெற்றவர். இன்றும் தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளராக பட்டிமன்ற நடுவராகப் பங்காற்றி வருகிறார்.
இவர் கல்வித் தகுதி: எம்.ஏ (தமிழ்), எம்.எஸ்.சி (உளவியல்). எம்.எட் எம்.பில் (கல்வியியல்). நெட் செட் டெட் பிஎம்டி, ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
அன்புள்ளம் படைத்தத் தமிழ் அன்பர்களோடு இணைந்து “தமிழ்ச்சங்கம் குளித்தலை” என்ற அமைப்பை ஏற்படுத்தித் தமிழை வளர்க்கின்றப் பணியை குளித்தலை தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர், தலைவர் என்ற முறையில் சங்க நிர்வாகிகளோடு இணைந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்நாடு அரசின் 2023 ஆம் ஆண்டிற்கான “தமிழ்ச்செம்மல் விருது” பெற்றுள்ளார். மேலும் கவிமுகில் கவிமாமணி, டாக்டர் அம்பேத்கர் விருது. நாவுக்கரசர் போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இளங்கலை. முதுகலை மாணவர்களுக்கு ஆய் நெறியாளராக இருந்துள்ளார். பன்னாட்டு தேசிய அளவில் 40க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து உள்ளார். 30க்கும் மேற்பட்ட பயிற்சி பட்டறைகளில் பங்கேற்றுள்ளார். தமிழக முவதும் பல்வேறு பள்ளி கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக 100க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் சிறப்புரையாற்றியுள்ளார்.
கற்றம்-கற்பித்தல் பணியில் 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், அய்யர்மலைய மௌவுண்ட்சிரீஸ் மெ.மே.நிலைப்பள்ளி. சமயபுரம் எஸ். ஆர்.வி மெ.மே.நிலைப்பள்ளி. நாமக்கள் பாவை கல்வியியல் கல்லூரி, தொட்டியம் கொங்குநாடு கல்வியியல் கல்லூரி, திருவானைக ஸ்ரீமத் ஆண்டவன் கலை & அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றியவர் தற்பொழுது குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்றி வருகிறார். கல்வியே அழியாச் செல்வம் என்பது இவருடைய முதல் நூலாகும்
கல்வியே அழியாச் செல்வம் - Product Reviews
No reviews available

