ஐ.டி.துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி?

0 reviews  

Author: காம்கேர். கே.புவனேஸ்வரி

Category: சுயமுன்னேற்றம்

Available - Shipped in 5-6 business days

Price:  125.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஐ.டி.துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி?

‘ஐ.டி. துறை அவ்வளவுதான்’, ‘எஞ்சினியரிங் படிப்பவர்களுக்கு எதிர்காலம் இல்லை’ என ஒரு பக்கம் விரக்திக் குரல்கள் எழுந்துகொண்டிருந்தாலும், இன்னமும் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு தரும் துறையாக அதுதான் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. வருங்காலத் தொழில்நுட்பம் அதுதான். அதைப் புறக்கணித்துவிட்டு எந்தத் துறையும் இயங்க முடியாது. அதனால்தான் வெறுமனே கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. படிப்பவர்களை மட்டுமே ஐ.டி நிறுவனங்கள் பணிக்கு எடுப்பதில்லை. இதர எஞ்சினியரிங் பட்டதாரிகளில் ஆரம்பித்து கலைக் கல்லூரிகளில் படிப்பவர்கள் வரை அனைவருக்கும் அந்த வாசல் திறந்திருக்கிறது.

ஏதோ ஒரு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்து, தேர்வு எழுதி, அதில் அதிகபட்ச மார்க் வாங்கி இந்த வேலையை வசப்படுத்திவிட முடியாது. இதற்கான தேர்வுமுறை, வழிகாட்டிப் பாதை இல்லாத வழி போல பலரை குழம்பச் செய்கிறது. எழுத்துத் தேர்வு, குழு விவாதம், டெக்னிக்கல் தேர்வு, எச்.ஆர் இன்டர்வியூ என பல தேர்வுகளை அடுத்தடுத்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும். படிப்பு, திறமை, தங்கள் பாடத்தில் இருக்கும் புலமை ஆகியவற்றைத் தாண்டி வேறு சில விஷயங்கள் இருப்பவர்களே இதில் ஜெயிக்க முடிகிறது. அவை எந்தப் பாடப் புத்தகங்களிலும் கிடைப்பதில்லை என்பதால், அனுபவத்தின் வழியாகவே தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதை நிபுணர் ஒருவர் கொடுத்தால் இன்னும் சுலபம் அல்லவா? அப்படி வந்திருப்பதே இந்த நூல்.

இருபது ஆண்டு காலத்துக்கும் மேலாக ஐ.டி. நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருபவரும், அதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு இன்டர்வியூ நடத்தி வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து வருபவருமான  காம்கேர் கே.புவனேஸ்வரி இந்த நூலை எழுதியிருக்கிறார். இதைப் படித்து, இதன்படி நடக்கும் இளைஞர்களுக்கு எதிர்காலத்தின் வாசல் அகலத் திறந்திருக்கிறது.

ஐ.டி.துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி? - Product Reviews


No reviews available