இன்னிசை
இன்னிசை
இசைக் கலைஞர்களின் வாழ்க்கைப் பாதை, அவர்களைக் கலைஞர்களாக்கிய தீர்மான கணங்கள், இசை உருவாகும் தருணத்தின் மாயை, மேலும் எந்தத் துறையிலும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் இருந்தால் வெற்றியை அடைய முடியும் என்பதை உணர்த்தும், இசைத்துறையை அறிமுகப்படுத்தும் நூல் இது.
மிக எளிய மொழியில் ஒவ்வொரு கலைஞனுக்கும் தன்னையறிதல் எனும் கணம் எவ்வாறு நிகழ்கிறது என்பதை ஆவணப்படுத்தும் அரிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் தனது சொந்த கருத்துகளை மிகக் கவனமாகத் தவிர்த்தும் அதே நேரத்தில் கட்டுரைகளை நிறைவு செய்ய உதவும் சிறிய தகவல்களை விட்டுவிடாமலும், இந்த நூலை வடிவமைத்துள்ளார்.
மாணவர்களுக்கும் இசை ஆர்வலர்களுக்கும்; இசை என்றால் என்ன?' என்ற அடிப்படை கேள்வியுடன் பயணிக்க விரும்பும் அனைவருக்கும் இந்நூல் ஒரு சிறந்த தேர்வு. குறிப்பாக, பெற்றோர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூலாகவும் இன்னிசை திகழ்கிறது.
இன்னிசை - Product Reviews
No reviews available

