இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும்!
இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும்!
'இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும்' என்ற நூலுக்கு முனைவர் திரு.எல்.பாலாஜி சரவணன் IPS அவர்கள் அளித்திருக்கும் அணிந்துரையில் இருந்து சில வரிகள்...
"அறிவை விரிவுபடுத்தும் பயணத்தின் முதல் படி. தாய்நாட்டை அறிந்து கொள்வதே." அந்த உயரிய நோக்கத்தை அழகுற நிறைவேற்றும் நூலாக, 'மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும்' விளங்குகிறது.
இந்தியா என்பது புவியியல் எல்லைகளால் மட்டுமே வரையறுக்கப்பட்ட நாடல்ல: மொழி, பண்பாடு, மரபு, கலை, கலாச்சாரம். இயற்கை வளம், வாழ்க்கை முறை என எண்ணற்ற தனிச்சிறப்புகளைத் தன்னகத்தே தாங்கி நிற்கும் மாபெரும் நாகரிகத்தின் அடையாளமாகும். அந்தப் பல்வகைச் சிறப்புகளை ஒருங்கிணைத்து, வாசகர்களுக்கு எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துரைப்பது எளிதான பணி அல்ல. அந்த அரிய முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார் இந்நூலின் ஆசிரியர் திரு.லதானந்த்.
மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுவாசகர்கள் என அனைவருக்கும் இந்நூல் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக, நாட்டைப் பற்றிய அடிப்படை அறிவை வளர்க்கும் இத்தகைய நூல்கள். பொறுப்புணர்வும் தேசிய உணர்வும் மிக்க குடிமக்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
ஒரு நல்ல நூல் தகவல்களை மட்டும் வழங்குவதில்லை; சிந்தனையைத் தூண்டுகிறது. அறிவை விரிவுபடுத்துகிறது. நாட்டைப் பற்றிய புரிதலை ஆழப்படுத்துகிறது. அந்த வகையில், 'மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும்' என்ற இந்நூல் பலரது கைகளில் தவழ்ந்து, அவர்களின் அறிவுப் பயணத்தில் நம்பிக்கைக்குரிய துணையாக அமைய வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.
இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும்! - Product Reviews
No reviews available

