இலக்கியங்கள் காட்டும் இனிய வாழ்வு
இலக்கியங்கள் காட்டும் இனிய வாழ்வு
முத்தும் அமிழ்தும் போல், இயற்கையாகவே ஒளிரும் போக்கும் நிலைத்து நின்றும் நிற்கவும் செய்யும் போக்கும் மிக்கது முத்தமிழ், இம்முத்தமிமுள் முதல் தமிழும் மூன்றாம் தமிழும் கைவரப்பெற்ற முனைவர் ஞானம் அவர்களின் கற்போர் நெஞ்சினை இனிக்கவும் பிணிக்கவும் செய்திடும் இலக்கியங்கள் காட்டும் இனிய வாழ்வு என்னும் இந்நூல் கோடையில் வீசிய மெல்லிய பூங்காற்று.
இந்நூலின் பேசுபொருள் நம்மை வியக்கவும் நயக்கவும் செய்யும் பாங்கில் அமைந்து இன்புறுத்துகின்றன. களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை. பசலை, அலர், இற்செறிப்பு, அறத்தொடுநிற்றல், உடன்போக்கு, கண்டோர் கூற்று, தலைவியின் மாண்பு, பரத்தமை, மக்கட்பேறு எனவரும் அகத்துறைகளை ஐங்குறுநூற்றுப் பாக்களோடு இயைத்து வெளிப்படுத்தும் பாங்கிளவாக ஐங்குறுநூற்றில் அகத்திணைக்கூறுகள் என்ற முதற் கட்டுரை ஐங்குறுநூறு முழுவதனையும் கற்க ஈடுபடுத்துகிறது.
இந்நாள் புதுப்போக்கு, பெண்ணிய நோக்கு இதற்கு ஒப்ப பெண்ணியச்சிந்தனைகளுடன் சங்ககால பெண்களின் நிலையைக் கண்டு காட்டியுள்ளதிறம் பாராட்டுதற்குரியதாகும். மேற்கணக்கு நூற்களாம் சங்க இலக்கியச்சிந்தனைகளைத் தொடர்ந்து, கீழ்கணக்கு நூல்களில் அறச்சிந்தனை ஓட்டங்களைத் தொகுத்துத் தொட்டுக்காட்டிய திறமும், சிலப்பதிகாரத்தைத் தமிழில் தோன்றிய முதற்கலைக்களஞ்சியம் எனவும் அழைக்கலாம் எனப் புதுமையுடன் பாராட்டி மகிழ்வுறும் நூலாசிரியரின் ஆழ்ந்த ஆய்வுபோக்கு பாராட்டுதற்குரியது.
இலக்கியங்கள் காட்டும் இனிய வாழ்வு - Product Reviews
No reviews available

