இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்
Price:
180.00
To order this product by phone : 73 73 73 77 42
இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் பிரதிபலிக்கும் யதார்த்தம் முகத்தில் அறையும்; சில சமயம் வியப்பூட்டும்; திகைக்கவும் கவலை கொள்ளவும் வைக்கும்; சில சமயம் பகுத்தறிவின் எல்லைகளை அனாயாசமாக மீறும். நமது அனுபவங்களின் மாறுபட்ட முகங்களும் சாத்தியங்களும் இந்தக் கதைகளில் தலைகாட்டுகின்றன. நேர்கோணத்தில் அமையும் பார்வையைத் தாண்டி இந்தக் கதைகள் செல்வதால் காட்சிகள் உருமாறுகின்றன. அனுபவத்தின் மனப்பதிவுகள் குழப்புகின்றன. நிகழ்வுகளும் தோற்றங்களும் தர்க்கத்தை மீறுகின்றன. தோற்றங்கள் தோற்ற மயக்கங்களாகின்றன. தோற்ற மயக்கங்கள் நமது அனுபவங்களை மாறுபட்ட பார்வையில் அணுகவைக்கின்றன. நமது உலகத்தைப் புதிய கண் கொண்டு பார்க்க வைக்கின்றன. சரளம், இயல்பான கதையோட்டம், துள்ளும் மொழிநடை, புனைவின் கொண்டாட்டம்; இவையே இந்தக் கதைகளின் சிறப்பு.
- அரவிந்தன்
இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள் - Product Reviews
No reviews available

