ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் தி இடியட்
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் தி இடியட்
ஃபியோதர் தஸ்தவ்யெஸ்கியின் ‘தி இடியட்’ நாவல் இளவரசர் மிஷ்கின் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது. அன்பான, நேர்மையான, பரிவுள்ள மனிதராக மிஷ்கினை தஸ்தயெவ்ஸ்கி உருவாக்கி இருக்கிறார்.
மிஷ்கினின் சுத்தமான மனமும் அனைவரையும் உண்மையாக நேசிக்கும் பண்பும், அவர் வாழும் உலகின் வழக்கமான யதார்த்தங்களை நிராகரிக்கச் செய்கின்றன. பொருளாதார ஆசைகள், பதவி விருப்பங்கள் மற்றும் சுயநலத்தால் இயக்கப்படும் சமூகத்தின் கண்களில் அவர் ஒரு மூடனாகத் தெரிகிறார். இறுதியில் அவர் அந்தச் சமூகத்திற்கு ஓர் அந்நியனாகவும் எதிரியாகவும் மாறுகிறார்.
இந்த நாவல் தூய அன்புக்கும் உலக ஆசைகளுக்கும் இடையிலான மோதலையும், சுயநலமான உலகில் அன்பும் நேர்மையும் எப்படி அபத்தமான விஷயங்களாகக் கருதப்படுகின்றன என்பதையும் எடுத்துரைக்கிறது.
அனந்தசாய்ராம் ரங்கராஜன் தன் தெளிந்த எழுத்து நடையில் மூல நூலின் சுவை குன்றாமல் நாவல் சுருக்கத்தைத் தந்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் தி இடியட் - Product Reviews
No reviews available

