எரர் 404 (நிழற்பிழை)

0 reviews  

Author: ஜபினத்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  320.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

எரர் 404 (நிழற்பிழை)

ஒரு நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள், மக்களுக்காக உழைத்த முன்னோடிகள், அவர்களுக்குப் பின்னால் இருந்த கட்சிகள், அவர்கள் நம்பிய சித்தாந்தங்கள், இவற்றில் எதுவுமே இனி முக்கியமல்ல என்ற நிலையை இந்தப் புதிய அரசியல் உருவாக்கிவிட முடியும்.
ஒரு பொய்ச் செய்தியாலும், ஒரு வதந்தியாலும், இன்னும் சொல்லப்போனால் திட்டமிட்டு இட்டுக்கட்டிக் கட்டமைக்கப்படும் ஒரு போலி பிம்பத்தாலும், பல நூறு ஆண்டுகளாக மக்கள் மனங்களில் பதிந்திருந்த ஒரு தலைவரையோ, ஒரு சித்தாந்தத்தையோ, ஒரு அரசியல் இயக்கத்தையோ மிக எளிதாக வீழ்த்திவிட முடிகிறது.
அதே நேரத்தில், எந்தத் தகுதியும் இல்லாதவர்களையும், சமூக விரோதிகளையும், தனிமனித ஒழுக்கமற்றவர்களையும், ஒரு தேசத்தின் தலைவராகவும், உயர்ந்த அரசியல் பதவிகளில் அமரத் தகுதியானவர்களாகவும் மக்கள் மனங்களில் உருவாக்கிவிட முடிகிறது.
இது வெறும் அரசியல் மாற்றம் அல்ல. இது மனித மனத்தின் மீதான ஒரு பெரும் ஆக்கிரமிப்பு. மனித சமூகத்தின் மாபெரும் சிந்தனை வீழ்ச்சி.
உண்மை எது, பொய் எது என்பதைப் பிரித்தறியும் நமது திறனையே மெல்ல மெல்லப் பறித்துக்கொண்டு, நாம் என்ன நம்ப வேண்டும், யாரை நேசிக்க வேண்டும், யாரை வெறுக்க வேண்டும், யாரைத் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கத் தொடங்கும் ஒரு புதிய நிழல் அதிகார அமைப்பு.
அதன் ஆபத்து அது கண்ணுக்குத் தெரியாத நிழலில் இயங்குவதில்தான் இருக்கிறது. நம்மைச் சுற்றிலும் அது இருக்கிறது என்பதை அறியாமலேயே, அதன் விளைவுகளுக்குள் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
எரர் 404 அந்தக் கண்ணுக்குப் புலப்படாத இருளுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. அங்கே நம்மை நிறுத்தி, நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகையே மறுபடியும் பார்க்கச் செய்கிறது.
-சம்சுதீன் ஹீரா

எரர் 404 (நிழற்பிழை) - Product Reviews


No reviews available