இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்

இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்
வெகுஜனன் இராவணா அவர்கள் எழுதியது.
இன்று சிலர் வேண்மென்றும் சிலர் அறியாமையாலும் சாதியம் ஒழிந்து விட்டதென்றும் தமிழ்த் தேசியமே அதை முறயிடித்தது என்றும் பேசுகின்றனர்.இரண்டுமே பொய்யானவை.சாதியம் இன்னும் ஒழிய வில்லை.அதற்கான சான்றுகள் வெளிவெளியாகவே உள்ளன.ஆயினும் சாதிய ஒடுக்குமுறைக்குச் சாவுமணி அடிக்கப்பட்டாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். அந்த வெற்றிக்குத் தமிழ்த் தேசியம் எவ்வகையிலும் பங்களிக்கவில்லை.அதை இயலுமாக்கியவர்கள் தாழ்த்தப்பட்ட வெகுசனங்களும் அவர்களோடு இணைந்து நின்று போராடிய நேர்மையான இடதுசாரி ,சனநாயக,முற்போக்குச் சக்திகளுமேயாவர். அதை இயலுமாக்கியது மாக்ஸிஸ லெனினியவாதிகளின் வழிநடத்தலின் கீழ் அவர்கள் முன்னெடுத்த வெகுசனப் போராட்டம் பாதையே. மேற்கூரிய வகையில் ஒரு வரலாற்று ஆவணமாகவும் இன்றைக்கும் பயனுள்ள போராட்டப் பாடங்களின் தொகுப்பாகவும் இந்தநூல் புதிய தகவல்களை உள்ளடக்கி மீளப் பதிப்பிக்கப் பெறுவது இன்று அவசியமான ஒரு சமூகக் கடமையினது நிறைவேற்றல் ஆகும்.சமூக ஒடுக்குமுறைகட்கு முகங்கொடுக்கிறவர்களும் சமூக நீதிக்காகப் போராடுகிறவர்களும் இந்த நூலைக் கட்டாயம் ஊன்றிப் படிக்க வேண்டும்.