தினம் ஒரு திருமந்திரம் (விஜயா)

0 reviews  

Author: சி.எஸ்.தேவநாதன்

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  90.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தினம் ஒரு திருமந்திரம் (விஜயா)

 ரொம்பப் பேருக்கு உடற்பயிற்சி, வாசிப்பு என்றால் முடியாது: ‘ நான் காலையில் சீக்கிரமா ஆபீசுக்குப் போகணுமே..’ ‘ நான் ஆபீஸ்லருந்து லேட்டடா வர்றவன்…’ என்று ஏதாவது ஒரு காரணம் வைத்திருப்பார்கள்.
அவர்களுக்கும் ஆசையிருக்கும் தேவாரம் படிக்க, வாசகம் படித்து உருக, பிரபஞ்கத்தில் மெய்மறக்க, ஆனால் நேரம் இருக்காது. அல்லது நேரம் ஒதுக்க மனமிருக்காது. அவர்கள் நினைத்தால் ஒரு எட்டு , பத்து நிமிஷம் படித்து, உட்கிரகித்துக் கொள்ள முடியும் ஒரு ஆன்மீக நூலின் ஓரிரு பக்கத்தை.
அவர்களுடைய சவுகர்யத்திற்காகவே மூவாயிரம் திருமந்திரப் பாடல்களில் முந்நூற்றிச் சில்லறை தினம் ஒரு திருமந்திரம் பாடல்களைத் தெரிவு செய்தோம். தினம் ஒரு பாடல் (தெளிவுரையுடன்) படியுங்கள் என்று பரிந்துரை செய்கிறோம். மனதில் பதிக்கத்தக்க பாடல்களைத் தேர்வு செய்திருக்கிறோம். அத்துட.ன் எளிய உரையும் இடம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேரம், இடம் முக்கியமல்ல. நீங்கள் படிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.
படியுங்கள்! வாழ்க்கையின் பரபரப்பு மனதில் தொற்றுவதால் உண்டாகிற உளைச்சாலும் இறுக்கமும் மறைந்துவிடும். படியுங்கள், உங்கள் மனம் சமநிலை காணும்.

தினம் ஒரு திருமந்திரம் (விஜயா) - Product Reviews


No reviews available