சென்னை : மறுகண்டுபிடிப்பு

0 reviews  

Author: தமிழில் சி.வி.கார்த்திக் நாராயணன்.

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  600.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சென்னை : மறுகண்டுபிடிப்பு

எஸ்.முத்தையா அவர்கள் எழுதியது. தமிழில்: சி.வி.கார்த்திக் நாராயணன்.

சென்னை என்னும் பெயர் எப்படி வந்தது என்னும் ஆதாரக் கேள்வியுடன் ஆரம்பமாகும் இந்தப் புத்தகம், சென்னையின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை மூன்றையும் ஆதார பூர்வமாகவும் முழுமையாகவும் பதிவு செய்கிறது.சென்னையோடு தொடர்புடைய கட்டடங்கள், நிறுவனங்கள், இடங்கள், சம்பவங்கள் மாத்திரமல்ல ஆச்சரியமூட்டும் மனிதர்களும் அவர்களுடைய சுலாரஸ்யமான கதைகளும்கூட இதில் அடங்கியுள்ளன. அந்த வகையில், இது சென்னையின் சரித்திரத்தை மட்டுமல்ல அந்நகரின் நகமும் சதையுமான விளங்கிய மனிதர்களின் வாழ்க்கையையும் ஒருங்கே சொல்கிறது. பிரபலமானவர்கள் மாத்திரமல்ல அதிகம் அறியப்படாத முக்கிய நபர்களின் பங்களிப்பும் இதில் பதிவாகி உள்ளது. ராபர்ட் கிளைவ் , வாரன் ஹேஸ்டிங்ஸ், ஃபிரான்சிஸ் டே, கணித மேதை ராமானுஜன், நோபல் விஞ்ஞானி சுப்ரமணியம் சந்திரசேகர், எஸ்.எஸ். வாசன் , ஜே. கிருஷ்ணமூர்த்தி, ருக்மிணி தேவி அருண்டேல் , பாரதியார், பச்சையப்பர், பாரி, பின்னி இன்னும் பல. சேப்பாக்கம் மைதானம், கவர்னர் மாளிகை, உயர் நீதிமன்றம், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, எல்.ஐ.சி. கட்டடம், வள்ளுவர் கோட்டம், சாந்தோம் தேவாலயம், துறைமுகம், சென்னையின் முதல் மருத்துவமனை, முதல் ஜாதிக் கலவரம், முதல் பாலியல் பலாத்கார வழக்கு, முதல் அச்சகம் , முதல் திரையரங்கம் என்றும் சென்னையின் கச்சிதமான குறுக்குவெட்டுத் தோற்றம் இதில் இடம்பெற்றுள்ளது. இன்னமும் அறியப்படாத, இதுவரை சொல்லப்படாத சென்னையின் பல நூறு ரகசியங்களைக் கொண்டிருக்கும் இந்நூல், இந்நகரை முழுமையாகப் புரிந்துகொள்ள ஒரு சிறந்த வரலாற்று வழிகாட்டி. சென்னையின் முறையான வரலாறு எழுதப்படவில்லை என்னும் குறையை எஸ்.முத்தையா இதில் தீர்த்து வைக்கிறார்.

சென்னை : மறுகண்டுபிடிப்பு - Product Reviews


No reviews available