செல்சுடர் நெடுங்கொடி
செல்சுடர் நெடுங்கொடி
நூலாசிரியரான பேராசிரியர் மேகலா இராமமூர்த்தி அறிவியல் துறையில் பேராசிரியர் என்றாலும், ஒரு தமிழ்ப் பேராசிரியரைப் போல ஆய்ந்த சங்க இலக்கியப் புலமை கொண்டிருப்பதை இப்புத்தகத்தின் துவக்கத்திலேயே உணரமுடியும். சங்கப்பாடல்களைச் சிலப்பதிகாரம், பக்தி இலக்கியம், பாரதியார், பாரதிதாசன், வைரமுத்து கவிதைகளொடு ஒப்பிட்டு விளக்குவது இவரது தனிச்சிறப்பு.
இத்நூலில் விளங்கும் 25 கட்டுரைகளையும் நான் படித்து முடித்தேன், படி தேன், மலை தேன் என்பதெல்லாம் உவமையல்ல, உண்மை என்பதை உணர்ந்தேன். முத்தமிழறிஞர் கலைஞர் சொல்லியபடி சங்கத்தமிழைப் படிப்பது, பலாப்பழத்தின் சுளையை எடுத்து உண்பது போன்ற ஒன்று.கலையை, பழத்திலிருந்து எடுப்பது எளிதல்ல. ஆனால் எடுத்தபின் உண்பதின் சுவையோ வெரு அதிகம். அப்படிப் பலாப்பழத்தை வெட்டி, களைகளைப் பிரித்து நமக்கொருவர் தருவதுபோல பலப்பல சங்கப்பாடல்களைச் சுவையான உவமைகளுடன். அருமையான கதைசொல்லியாக நமக்கு அள்ளித் தருகிறார் நூலாசிரியர்.
முனைவர் அரசு செல்லையா
அமெரிக்காவில் வசித்துவருசின்ற மேகன இராமமூர்த்தி தமிழ்மொழிமீது மிகுந்த பற்றுடையவர். நாவன்மைமிகு பேச்சாளர்; சிறந்த எழுத்தாளர். சங்கத் தமிழிலக்கியத்தில் பேசப்பட்டிருக்கும் உயர்ந்த கருத்துக்களைத் தமிழ்மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில் 'செல்சுடர் நெடுங்கொடி' எனும் தலைப்பில் சுவையான செய்திகளை விறுவிறுப்பான கட்டுரை வடிவில் இந்நூலில் அளித்துள்ளார்.
கணிப்பொறியிலும் உயர்கல்வி கற்றிருக்கும் இவர், தம்முடைய நூலுக்கான அட்டைப் படத்தையும், கட்டுரைகளுக்குப் பொருத்தமான படங்களையும் செய்யறிவின் (Al images) துணையோடு தாமே உருவாக்கியுள்ளமை சிறப்பு.
இந்நூலிலுள்ள கட்டுரைகள் அனைத்துமே என்னைக் கவர்ந்தன; குறிப்பாக, வெளிர் நிறத்தையே அழகென்று கொண்டாடும் இன்றைய மனநிலைக்கு நேரெதிராக அன்றைய மக்கள் கருநிறத்தைக் கொண்டாடியிருப்பதையும் கருநிற மங்கையரை அழசியர் என்று வருணித்திருப்பதையும் இந்நூல் வழியே அறிந்து மகிழ்ந்தேன்.
ஆழமாகச் சிந்திக்கவும், பல புதிய செய்திகளை அறிந்துகொள்ளவும் இந்நூல் பெருந்துணை புரிகின்றது எனில் மிகையில்லை. இந்நூலைத் தமிழ்மக்கள் வாங்கிப்படித்துப் பயனுறவேண்டும் என்றும் ஈதொத்த நூல்கள் பலவற்றை மேகண இராமமூர்த்தி தொடர்ந்து படைத்தளிக்க வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
முனைவர் சேஷா சீனிவாசன்
அமெரிக்கவாழ் தமிழரான மேகலா இராமமூர்த்தி அவர்கள் 'செல்சுடர் நெடுங்கொடி" என்னும் இந்நூலில் சங்க அகப்பாடல்களின் சிறப்பை 25 தலைப்புகளில் அழகோவியமாகத் தீட்டித் தந்துள்ளார். சங்க அகத்திணை நூல்களில் பேசப்பட்டிருக்கும் தமிழரின் வாழ்வியம் விழுமியங்களைப் பல நூல்களோடு ஒப்பிட்டு இந்நூலின் அழகுறக் காட்டுகின்றார்.
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமது தந்தையாரின் எண்ணக் கனவுகளை நிறைவேற்றி அவர் காட்டிய வழியில் தடம்பதித்து அயலகத்தில் தமிழை இளைய சமுதாயத்திற்குப் பரப்பி வருபவர் போன இராமமூர்த்தி இருவருள். திருவருள் துணையோடு நூலாசிரியரின் தமிழ்த் தொண்டு மேன்மேலும் சிறக்கட்டும்! தமிழ்கூறு நல்லுலகம் இந்நூலை ஏற்றுப் போற்றட்டும்!
முனைவர் க. திலகவதி
செல்சுடர் நெடுங்கொடி - Product Reviews
No reviews available

