பிராமிணிஸ்ட்டுகள் குண்டு வைத்தார்கள் முஸ்லிம்கள் தூக்கிலிடப்பட்டார்கள்

0 reviews  

Author: எஸ்.எம்.முஷ்ரிஃப்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  400.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பிராமிணிஸ்ட்டுகள் குண்டு வைத்தார்கள் முஸ்லிம்கள் தூக்கிலிடப்பட்டார்கள்

வேர்கள் பதிப்பகம்

இந்த நூல் மராட்டிய காவல்துறை அதிகாரி எஸ்.எம். முஷ்ரிகப் அவர்களின் இன்னொரு நூல் ஏற்கனவே "கர்கரேயைக் கொலை செய்தது யார்? இந்திய தீவிரவாதத்தின் உண்மை முகம் "/11 நீதித்துறையும் மயங்கியது ஏன்?ர் "இந்தியாவின் ஒரே தீவிரவாத அமைப்பு" என்ற நூல்களைத் தந்தவர்.

இந்த நூலின் மையப் பொருள் நம் நாடெங்கும் பல்வேறு காலகட்டங்களிலும் நடந்த குண்டு வெடிப்புகள் பிராமிணிஸ்ட்டுகளின் கைவண்ணம். என்பதே குண்டு வெடிப்புகளை நடத்திவிட்டு பழியை மிகவும் பாங்காக முஸ்லிம்கள் மீது போட்டு விட்டார்கள். இதில் IB என்ற மத்திய உளவுத்துறை, NIA என்ற தேசிய புலனாய் முகமை, நமது ஊடகங்கள் ஆகியவை மிகவும் நல்லமுறையில் துணை நின்றன. அதனால் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதும், அவர்களைத் தண்டிப்பதும் மிகவும் சுபலமாகப் போய்விட்டது.

தனது கருத்தை வலியுறுத்தவும், நிரூபிக்கவும், பலநூறு குற்றப்பத்திரிகைகளை ஆய்வு செய்துள்ளார். அந்தந்த காலகட்டத்தில் வந்த பத்திரிகை செய்திகளை ஆய்வு செய்துள்ளார். பல தீர்ப்புகளையும் ஆய்வு செய்துள்ளார். முடிவாக 2002 முதலே நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகள் "ஆர்.எஸ்.எஸ்," அபிநவ் பாரத்" "பஜ்ரங்தள்" "ஜெய் வந்தே மாதரம்" "சனாதன் சாஸ்த" ஆகிய பிராமிணிஸ்ட்டு அமைப்புகளின் கைவண்ணம் என்பதை நிரூபிக்கின்றார்.

இதில் பல நீதிமன்றங்கள், ஊடகங்களின் செய்திகளால் பெரிதும் ஆட்கொள்ளப்பட்டு, தீர்ப்பு வழங்கியதையும் சுட்டிக்காட்டுகின்றார்.

நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளை, ஒரு மூத்த நீதிபதியைக் கொண்டு மறு புலனாய்வுக்கு உட்படுத்திட வேண்டும். இதைச் செய்தால் நிச்சயமாக இந்தக் குண்டு வெடிப்புகள் பிராமிணிஸ்ட்டுகளின் கைவண்ணம் என்பதைத் தெரிந்துகொள்வார்கள் என்பதும் அவருடைய நம்பிக்கை! இதில் முஸ்லிம்கள் தண்டிக்கப்பட்ட குண்டு வெடிப்புகளும் அடங்கும்.

பிராமிணிஸ்ட்டுகள் குண்டு வைத்தார்கள் முஸ்லிம்கள் தூக்கிலிடப்பட்டார்கள் - Product Reviews


No reviews available