ஆயுத வரி

ஆயுத வரி
"இதை வாசிக்கிறபோது எனது ஆச்சரியப் இரமிக்கு இந்தக் கலை அமைவு எப்படிக் கைவந்தது என்பது தாள், நெஞ்சையும் கவர்கிறது. சிந்தனையையும் தூண்டிவிடுகிறது. இந்த அனுபவங்கள் உயிர்த துடிப்புள்ள வர்ணக் சிறுகளாக மிறந்து பிறந்து நிதி கின்றன. அந்த அப்பாவித்தனம் ஒருவேளை நீம்மைச் சிரிக்கவைக்கிறது. இன்ளொருவேனை நம்மை அழ வைக்கிறது. ஆனால் எல்லா வேளைகளிலும் நம்மைச் சிலிர்க்கவைக்கிறது."
பேரா.கா. சிவந்தம்பி 'காலம் ஆகிவந்த கதை' முன்னுரையில்
"கதை நடத்திச் செலகையில் விவரிப்பில் வாசகனுக் குள் ஒரு நிரந்தா இருக்கையை உறுதிசெய்துவிடுகிற இரவி சிறந்த படைப்பாளிக்கான இருக்கையையும் உறுதிசெய்துகொள்கிறார்."
பா.செயப்பிரகாசம் நெடும்தூரம்' முன்னுரையில்
"இரவியின் சுவடுகள் மென்மையானவை. வாழ்வின் ரம்மியங்களைத் நுய்ப்பதற்கான வேட்கையிலிருந்து எழுபவைதான் அவரது கதைகள். ஆனால் அவரது இனிமையான வாழ்க்கையை அவரால் வாழமுடியாமல் போகிறது. அவரது வாழ்க்கை அவரது கைகளில் இல்லை. ஓட ஓடத் துரத்தப்படுகிறார். அவரைத் துரத்துவது இராணுவம் மட்டுமல்ல. நியாய உணர்வின் உறுத்தலினாலும் கடமை உணர்வின் பாரத்தினாலும் தலைதெறிக்க அவர் ஓடுகிறார். அந்த அவதியினால் உடல் நோகிறது. மனம் வெதும்புகிறது. அதனால் ஏற்பட்ட துயரப் பெருமூச்சின் வெம்மை அவரது சுதைகள் எல்லாவற்றிலுமிருந்தும் கசிகிறது."