ஏவி.எம். தந்த எஸ்.பி.எம்
ஏவி.எம். தந்த எஸ்.பி.எம்
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தன் வாழ்க்கைப் பாதை சினிமாதான் என்று தீர்க்கமாகவும் தெளிவாகவும் முடிவு செய்து தன் தந்தையிடமும் தெரிவித்தவர், தமிழ்த் திரையுலகில் சரித்திரம் படைத்த இயக்குநர் எஸ்பி.முத்துராமன். மகனின் குறிக்கோளை ஈடேற்ற முயன்றார் தந்தை இராம.சுப்பையா. அதன் முதல்படியாக கண்ணதாசனின் ‘தென்றல்’ பத்திரிகையில் பணியாற்றும் வாய்ப்பை எஸ்பி.எம். பெற்றார். இராம.சுப்பையாவோடு நட்பு கொண்டிருந்த ஏவி.மெய்யப்பச் செட்டியார், எஸ்பி.எம்மை தன் வளர்ப்பு மகனாகவே பாவித்து திரைத்துறையில் காலூன்றச் செய்தார். ஏவி.எம். நிறுவனத்தின் எடிட்டிங் பிரிவில் ஒரு சாதாரண பயிற்சியாளராகச் சேர்ந்து, படிப்படியாக முன்னேறி அனைவரும் பாராட்டும் இயக்குநராக உயர்ந்தார் எஸ்பி.எம். அதற்கு உறுதுணையாக அமைந்தது ஏவி.எம். என்ற பயிற்சிக்களமும், மெய்யப்பச் செட்டியாரின் அன்பும்தான் என்பதை இந்த நூலின் மூலம் உணர முடிகிறது. திரைத்துறையில் கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், ரிஷிகேஷ் முகர்ஜி, திருலோகசந்தர், குகநாதன் போன்ற ஜாம்பவான்களோடு பணியாற்றிய அனுபவங்கள் குறித்து எஸ்பி.எம் கூறிய சுவையான செய்திகளை அழகாகத் தொகுத்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ராணிமைந்தன். எம்.ஜி.ஆர்., சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற பிரபலங்களோடு பணியாற்றிய அனுபவங்களையும், அவர்களின் குணநலன் களையும் பல இடங்களில் நினைவுகூர்ந்துள்ளார். படம்பிடித்து காட்டும் இயக்குநரின் வாழ்க்கை அனுபவங்களையே படம்பிடித்துக் காட்டும் சுவைமிகுந்த வாழ்க்கைச் சித்திரம் இந்த நூல்.
ஏவி.எம். தந்த எஸ்.பி.எம் - Product Reviews
No reviews available