அவள் அவளாக
அவள் அவளாக
கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் இளம் இலக்கியவியல் தமிழ் இலக்கியம் பயின்று வரும் சு.த.குறளினி ஈரோடு மாவட்டத்தின் சிறார் படைப்பாளி ஆவார்.
தன் எட்டாம் வகுப்பில் ‘என் ஆத்திசூடி’யைத் தொடர்ந்து ‘உறவின் உயிர்ப்பு’. ‘வாசித்தேன் சுவாசித்தேன்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். குறளமுது என்ற You Tube சேனலைத் தொடங்கி அதில் தமிழ் சார்ந்த பதிவுகளைப் பதிவிட்டு வருகிறார். கதை சொல்லல் பயிலரங்கில் பங்கேற்று சிறந்த கதைசொல்லியாகவும் விளங்கி வருகிறார்.
இவரின் தனித்திறமைகளைப் பாராட்டி தினமணி நாளிதழ் ஈரோடு மாவட்டத்தின் ‘பல் துறை வித்தகி என்று இவரை அடையாளப் படுத்தியுள்ளது. 2024இல் திருப்பூர் வாசகர் சிந்தனை மன்றத்தின் ‘கனவு’ என்ற இளையோர் விருது. 2025இல் கோபி கலை அறிவியல் கல்லூரியின் ‘கோபி கண்ட புதுமைப்பெண் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
அவள் அவளாக - Product Reviews
No reviews available

