அதிகாலைப் பெருவெள்ளம் : மாவோவும் சீனப்புரட்சியும் (1893 - 1954)

0 reviews  

Author: ஹேன் சூயின்

Category: மார்க்சியம்

Out of Stock - Not Available

Price:  600.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அதிகாலைப் பெருவெள்ளம் : மாவோவும் சீனப்புரட்சியும் (1893 - 1954)

தமிழில்:  நிலவண்ணன் அவர்கள்.. மாவோ ஒரு பதிரல்ல; அவர் தனது சகாப்தத்தையும் மக்களையும் தன்னகத்தே உள்ளடக்கிய ஒரு முழுமையானவர்; தேசமே மனிதனாக ஆனவர். புரட்சி மாவோவைத் தயாரித்தது. அதேபோல மாவோ புரட்சியை உருவாக்கினார். மாவோவுடைய வாழ்க்கை அவருடைய வாழ்க்கை மட்டுமல்ல; அது சீனாவின் ஒரு காலகட்டத்தின் பிரதிநிதித்துவமாகவும் இருக்கிறது; இது குறித்து மாவோ தாமே எப்போதும் உணர்வுள்ளவராக இருந்து வந்துள்ளார். அவர் பல முரண்பாடுகள் கொண்ட மனிதராவார்; ஒரு விவசாயியைப் போல சபிக்கவும் சீறியெழவும் செய்யும் அவர் ஒரு செவ்வியல் அறிஞர்; இடைவிடாது புகைப்பிடிக்கும் அவர் உடல்நலத்தில் கண்ணும் கருத்துமாயிருப்பவர். நகைச்சுவையும் வேடிக்கையும் நிறைந்தவராக இருக்கும் அவர் மிக மிகக் கண்டிப்பானவரும் ஆவார்; கள்ளங்கபடமற்றவர்; கூர்மதி படைத்தவர்; சூதுவாதறியாதவர்.ஆனால் அவரை யாரும் முட்டாளாக்கி விட முடியாது; எளிமையானவர் ஆனால் சிக்கலானவர், எதையும் நுணுக்கமாக ஆய்வு செய்பவர்; எதையும் உன்னிப்பாகக் கவனிப்பவர். இருப்பினும் தனது சொந்த உடை குறித்து மறதி கொண்டவராகவும் கவனக் குறைவானவராகவும் இருப்பார்; வரலாற்றை உருவாக்கும் மனிதருக்குரிய பொறுமை கொண்டவராக இருந்தார்; இருப்பினும் செயல்படும் தருணம் வந்துவிட்டபோது ஒரு நிமிடத் தாமதத்தைக் கூட பொறுத்துக்கொள்ளமாட்டார்.

அதிகாலைப் பெருவெள்ளம் : மாவோவும் சீனப்புரட்சியும் (1893 - 1954) - Product Reviews


No reviews available