27 நட்சத்திரக் கோயில்கள்

0 reviews  

Author: .

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  205.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

27 நட்சத்திரக் கோயில்கள்

மயன் அவர்கள் எழுதியது.

உங்கள் ஜன்ம நட்சத்திரம் எது என உங்களுக்கு  தெரியும்.அந்த நட்சத்திரத்துக்கான அதிதேவதை யார், உங்கள் நட்சத்திரம் மூலம் கி்டைக்கும் நற்பலன்களை முழுமையாக நீங்கள் பெறுவதற்குச் செல்ல வேண்டிய கோயில் எது வணங்க வேண்டிய தெய்வம் எது செய்ய வேண்டிய பரிகாரம் என்ன.... இந்த எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதற்கு முன்னால் நட்சத்திரங்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு பற்றிபொதுவாகச் சில விஷயங்களை அறிந்து கொள்வோம். ஒருவருடைய ஜாதகப்படி, ஜனன காலத்தில் சந்திரன் எந்த வீட்டில் நிற்கிறாரோ, அதுதான் அவருடைய ராசி. அதே சந்திரன் எந்த நட்சத்திரம்தான் அந்த ஜாதகக்காரருக்கு உரியது.ஜனன காலத்து நட்சத்திர சாராம்சத்தைக் கொண்டுதான் ஒருவருடைய வாழ்நாள் முழுவதற்குமான தசாபுக்திகள் கணக்கிடப்படுகின்றன.நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும்- படிப்பு, உத்யோகம், வியாபாரம், தொழில், திருமணம்,சொத்துச் சேர்க்கை- என்று எல்லா விஷயங்களுக்கும் , நட்சத்திரத்தை வைத்து பலன்களைக் கணிப்பதே துல்லியமாக இருக்கும்.இது ஜோதி்டம். ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுடைய குணஇயல்புகளைத் தீர்மானிக்கும் சக்தி அந்தந்த நட்சத்திரத்துக்கு இருக்கிறது.அதே சமயம் அந்த நட்சத்திரத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தாங்கிக் கொள்ளும் சக்தி பெறவோ அல்லது நிவர்த்தி செய்துகொள்ளவோ, அந்த நட்சத்திரத்தையும் தம் ஆளுமைக்குட்படுத்திய தெய்வங்களின் அனுக்கிரகத்தில் இயலும்!!

27 நட்சத்திரக் கோயில்கள் - Product Reviews


No reviews available