தொழில் செ(ய்)ய விரும்பு!
தொழில் செ(ய்)ய விரும்பு!
போட்டிகள் நிறைந்த இந்தக் காலத்தில் சொந்தமாகத் தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்துவது என்பது சவாலான விஷயம். ஒரு தொழிலைத் தொடங்குமுன் காலம் நேரம் மட்டும் பார்க்கக்கூடாது. தொழில் செய்யும் இடம், நம் தொழிலின் போட்டியாளர்கள் யார் யார், எத்தனை பேர் இதுபோன்ற பல விஷயங்களை கவனத்தில்கொண்டு தொடங்க வேண்டும். செய்யும் தொழிலில் அறம் இருக்க வேண்டும். அறம் தவறி தொழில் செய்தால் நீண்ட நாள் அந்தத் தொழில் நீடிக்காது என்பதை பலவேறு உதாரண சம்பவங்களின் மூலம் எடுத்துக்காட்டியுள்ள நூலாசிரியர், ‘கற்றல்’ எல்லா இடங்களிலும் கிடைக்கும். நாம் பார்க்கும் சமூகத்தில் மனிதர்கள், திடீரென நடக்கும் சம்பவங்கள் என எல்லாவற்றிலும் ‘கற்றல்’ கிடைக்கும். ஒரு தொழிலாளிக்கு, அதுவும் தன் தொழிலுக்குத் தானே முதலாளி ஆகியிருக்கும் தொழிலாளிக்கு ‘கற்றல்’ என்பது மிக முக்கியம் என்றும் கூறுகிறார். தொழிலில் வெற்றிபெற வேண்டுமானால் தொழில் தொடங்கியவர் தன் வலிமையை ஏற்றிக்கொள்ள வேண்டும். இந்த நூல் அந்த வலிமையை ஏற்றிக்கொள்ளும் வழிகளைச் சொல்லி சுய தொழிலில் வெற்றிபெற உங்களுக்கு வழிகாட்டும்.
தொழில் செ(ய்)ய விரும்பு! - Product Reviews
No reviews available

