தியாகப் பாதை(பரம்வீர் சக்ரா)
தியாகப் பாதை(பரம்வீர் சக்ரா)
ஒரு நாடு நிம்மதியாக இருக்கவேண்டுமானால் அதன் ராணுவம் பலமாக இருக்கவேண்டும். ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகமே ஒரு நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
இந்திய ராணுவ வீரர்களின் வீரமும் தியாகமும் உலகின் எந்த ஒரு ராணுவத்துக்கும் சற்றும் குறைவானதல்ல.
மூவர்ணக் கொடியையும் பாரதத்தையும் காக்கப் போராடி, போர்க்களத்தில் தங்கள் வீரதீரத்தைக் காட்டிய வீரர்களுக்குத் தரப்படும் உயரிய விருது பரம்வீர் சக்ரா.
பரம்வீர் சக்ரா பெற்ற வீரர்களின் தீரச் செயலையும் ஈடு இணையற்ற தியாகத்தையும் மயிர்க்கூச்செறிய விவரிக்கிறது இந்தப் புத்தகம். அதனூடே இந்தியாவின் போர்க்கள வரலாற்றையும் அந்தச் சூழலின் அரசியல் நிலையையும் அறிந்துகொள்ள முடிவது கூடுதல் சிறப்பு.
***
சரியான ஆராய்ச்சிகளுக்குப் பின்னர். ஒவ்வொரு சம்பவத்தையும், அந்தப் போர்கள் நடந்த காலச் சூழ்நிலைகளையும், விருது பெற்றவர்களின் வீரச் செயல்களையும், நாட்டுக்காக, நாட்டின் கௌரவத்திற்காக அவர்கள் வெளிப்படுத்திய போற்றத்தக்கத் தியாகத்தையும் வீரத்தையும் ஆசிரியர் விவரித்துள்ளார். அதோடு இந்த வீரர்கள் பணியாற்றிய படைப்பிரிவுகளைப் பற்றிய ஓர் அறிமுகத்தையும் இந்தப் புத்தகம் அளிக்கிறது. இந்த உழைப்பே, இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தால், முழுவதும் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பாக ஆக்கி உள்ளது.
- Lt. Gen. அருண் அனந்தநாராயண்
தியாகப் பாதை(பரம்வீர் சக்ரா) - Product Reviews
No reviews available

