தென்னிந்தியாவும் ஸ்ரீலங்காவும்
தென்னிந்தியாவும் ஸ்ரீலங்காவும்
தென்னிந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையிலான பல்வேறு தொடர்புகளை எடுத்துக்காட்டி விளக்குவதாக இந்த நூல் அமைந்துள்ளது. இது, வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்து, தென்னிந்தியாவையும் ஸ்ரீலங்காவையும் ஒப்பிட்டு ஆராய்கிறது. தென்னிந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும்மான நிலவியல் தொடர்பு தொடங்கி, அவர்களது அரசியல் வாணிபம் பண்பாடு என அனைத்து தொடர்புகளையும் விரிவாகவும் ஆழமாகவும் இந்த நூல் ஆய்ந்துரைக்கிறது.
ஸ்ரீலங்காவின் பாறைகள், தாவரங்கள், உயிரினங்கள் முதலியனயாவும் தென்னிந்தியாவோடு ஒத்துள்ளதை நிலவியல் தொடர்பு காட்டுகிறது. ஸ்ரீலங்காவின் பூர்வ குடிகளாக வடாக்கள், நாகர்கள், யாக்காக்கள் முதலானோரை இந்நூல் குறிப்பிடுகிறது. இவர்களுள் வடாக்கள் வேட்டையாடுதலைத் தொழிலாக கொண்டுள்ளதையும், பாம்பை வழிபடக்கூடிய நாகர்கள் தென்னிந்தியர்களோடு மிகவும் தொடர்புடையவர்களாக அறியப்படுவதையும் இந்நூல் எடுத்துரைக்கிறது.
பல்லவர்கள், முற்கால பாண்டியர், மத்திய பாண்டியர், விஜயநகர பேரரசு என இவர்கள் காலங்களில் எல்லாம் தென்னிந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையிலான தொடர்பை விரிவாக ஆராய்கிறது இந்நூல், பண்டைய நாணயவியல் சான்றுகளைக் கொண்டு, இரு நாடுகள் இடையேயும் நடைபெற்ற வணிக தொடர்பை உறுதிப்படுத்துகிறது இந்நூல்,
தென்னிந்தியாவும் ஸ்ரீலங்காவும் - Product Reviews
No reviews available

