தருமமிகு சென்னை

0 reviews  

Author: சந்தியா நடராஜன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தருமமிகு சென்னை

'எங்கள் ஊரைப் போல வராது' என்று சொல்லிக்கொண்டு வரும் மக்களை, 'நம்ம சென்னை' என்று சொல்ல வைத்துவிடும் பெருமைக்குரியது இந்தச் சென்னை மாநகரம். இந்த நகரத்தின் அத்தனை கோணங்களையும் காவிரி மை தொட்டு வரைந்திருக்கிறார் சந்தியா நடராஜன். கூவக்கரை ஓவியத்தில் கொலுவிருக்கிறது ஒளியும் நிழலும் ஆடும் இருமையின் வசீகரம். நகரத்துத் தேரில் வீதியுலாக் காண்கிறது அனுபவத்தின் சுடர். சந்தியா நடராஜன் மனிதர்களைச் சேமிப்பவர். அதனால் நூலில் பல்லுருக்காட்டுகிறது மனித கலைடாஸ்கோப். அறியத் தவறியதைச் சுட்டுகிறது ஆரவாரமற்ற அறிவின் குரல். பழமையின் உள்ளங்கை ரேகையை விரித்துக் காட்டுகிறது அன்பின் கரம். காலம் புதைத்து வைத்த பண்பாட்டு ரசத்தைச் சுவைக்க அழைக்கிறது 'தருமமிகு சென்னை'. நூலை வாசிக்கும் தோறும் நமக்குள் பெருகுவது பெருமிதத்தின் வெள்ளோட்டம். இந்நூலின் செம்மை என்பது இயல்பான மொழிநடையின் உயிரோட்டம்.

தருமமிகு சென்னை - Product Reviews


No reviews available