தறியுடன்...

0 reviews  

Author: இரா.பாரதிநாதன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  650.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தறியுடன்...

பேரிரைச்சலாய் இடைவிடாது காதுகளில் ஒலிக்கும் இயந்திரச் சத்தம்.கண்களைத் திறக்க இயலாமல் அப்பிக்கிடக்கும் பஞ்சுத் துகள்கள்.பத்துப் பதினான்கு மணிநேரம் நின்றுக் கொண்டே உழைத்துச் சலித்த கால்கள்.திடீர் திடீரென்று மூக்கில் ரத்தம் வடிவதும்,வயதா காலத்தில் நெஞ்சுவலியும்இ காசநோயும் வருவது விசைத்தறி தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட அவல வாழ்க்கை. அப்படியிருந்தும் விதவிதமாய் துணிகள் நெய்யப்படைக்கப்பட்டவனுக்கு அவன் நெய்த ஆடையில் கோவணமும் செந்தமில்லை,என்பதே கசப்பான உண்மை.அந்தக்கொடிய வாழ்க்கையில் நான் அனுபவப்பட்டவன் மட்டுமல்லாது,சுரண்டலுக்கெதிராய் தொழிற்சங்கத்தில் இணைந்துப் போராடியவன்.இந்தப் படைப்பு என் சொந்த அனுபவமே...

குவைத் போரே நடக்கவி்ல்லை அது வெறும் கற்பனை என்று சொன்னானாம் ஒரு பின் நவீனத்துவவாதி.அப்படிப்பட்டவனல்ல மார்க்சியவாதி.அவன் யதார்த்தத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டு வாழ்க்கை நடத்துபவன்.

காலத்தையும்,களத்தையும் பதிவு செய்வதுதான் இலக்கியம் என்று எங்கோ படித்த ஞாபகம்.ஆனால்,அந்த இலக்கியத்தில் சமூக மாற்றத்திற்கான அக்கறை இருக்க வேண்டும் என்க்கு சொல்லிக் கொடுத்தது மார்க்சியம்.நானும் கொஞ்சம் அக்கறைப்பட்டிருக்கிறேன் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

தறியுடன்... - Product Reviews


No reviews available