தாராஸ் புல்பா
தாராஸ் புல்பா
ருஷ்ய நாவல் இலக்கியத்தின் பிதாமகன் என்று கோகல் கருதப்படுகிறார். அம்மொழியின் மகோன்னதமான இலக்கிய மாளிகையின் நுழைவாயில் என்று புஷ்கினைக் கூறினால் அம்மாளிகையின் ஏனைய யாவுமாக நிற்பவர் கோகல். தஸ்தயெவ்ஸ்கி "நாங்கள் எல்லோரும் கோகலின் 'மேலங்கி'யிலிருந்து வெளிவந்தவர்கள்" என்று கூறினார்.
போலந்தின் ஆட்சியாளர்களை எதிர்த்துக் கோஸக்குகள் தங்கள் சுதந்திரத்தையும், மத உரிமையையும் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தொடுத்த பல போராட்டங்களைப் பின்னணியாகக் கொண்டது இந்த நாவல்.
இந்த மகத்தான நாவலை 1833-42 க்கு இடைப்பட்ட காலத்தில் கோகல் எழுதினார். இதற்கு முன்பே அவர் ஒரு நாவல் எழுதியிருந்தார். ஆயினும் இந்த நாவல்தான் அவரை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது. தூங்கி விழுந்து கொண்டிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலக்கியத்திற்குச் சவால் விட்டதுபோல் தோன்றியது இந்நாவல்.
'ஹோமரின் ஒடிஸியைப் படித்துவிட்டு அதை அடியொற்றி எழுதப்பட்டது இந்நாவல்' என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் "தாராஸ் புல்பா" வெளிவந்த பிறகுதான் ஒடிஸி ருஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்பதை இவர்கள் கவனிக்கவில்லை. ஒடிஸியின் சாயலும், ஹோமரின் வேகமும் இந்நாவலில் பிரதிபலித்ததால் அது கோகலின் மேதமையைத்தான் வெளிப்படுத்துகிறது.
தாராஸ் புல்பா - Product Reviews
No reviews available

