தமிழன்னை அந்தாதி
தமிழன்னை அந்தாதி
கோ.சீதாராமன்
தமிழ் மொழியின் சிறப்பு, அதன் தொன்மை, தனித்துவம், செழுமை, மற்றும் பண்பாட்டுப் பெருமைகளில் அடங்கியுள்ளது. இது இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் சிறந்து, அழகு (தமிழ்). இனிமை (தேன்தமிழ் எனப் பொருள்பட்டு, 2004-இல் இந்தியாவின் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இன்று உலகெங்கும் பரந்து விரிந்து, இலக்கிய வளம் கொண்ட உன்னத மொழியாகத் திகழ்கிறது. தமிழ் மொழியை அன்னையாகப் போற்றுவது என்பது. மொழியை உயிராக, பண்பாட்டின் ஆதாரமாக, இனத்தின் அடையாளமாக, தாயாகக் கருதிப் போற்றும் ஓர் உயரிய மனப்பான்மையாகும். பல கவிஞர்கள் தமிழை அன்னையாகப் போற்றிப் பல கவிதைகளை வடித்துள்ளனர். அந்த வரிசையில், தமிழ் அன்னைக்காக வடிக்கப்பட்ட அந்தாதி எனும் ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாக இந்நூல் விளங்குகிறது.
தமிழின் தொன்மையையும், பெருமையையும், பல்வேறு இலக்கண இலக்கிய வளத்தையும், அழகையும் எளிய தமிழில் மரபுக் கவிதைகளாக முன் வைத்துள்ளது இந்நூல். இனிய தமிழ்மொழி இருக்க, அதன் பெருமைகளை உணராது அயல் மொழியைப் போற்றுவது தவறு என்பதனை இந்நூலின் பல பாடல்கள் வலியுறுத்துகின்றன.
தமிழன்னை அந்தாதி - Product Reviews
No reviews available

