தமிழ் உரைநடை: தோற்றம் வளர்ச்சி உச்சம் சரிவு
தமிழ் உரைநடை: தோற்றம் வளர்ச்சி உச்சம் சரிவு
தமிழ் உரைநடை கல்வெட்டு, இலக்கியங்களுக்கு எழுதப்பட்ட உரைகளில் (இளம்பூரணர், நச்சினார்க்கினியர்..) வேரூன்றி, வீரமாமுனிவர் போன்ற ஐரோப்பியர் வருகையால் நவீன வடிவம் பெற்று, அச்சு இயந்திரங்களால் வளர்ச்சி கண்டு, சிறுகதை, நாவல், கட்டுரை எனப் பல பிரிவுகளாகப் பரவி, பாரதியார் காலம் முதல் நவீன இலக்கிய வளர்ச்சி அடைந்து, இன்று பல பரிமாணங்களில் செழித்துள்ளது. இந்த நூல், உரைநடையின் தோற்றம் குறித்தும், அது வளர்ச்சி அடைந்த காலகட்டத்தையும், அது உச்சநிலை பெற்ற காலத்தையும், உரைநடையில் சரிவு உண்டான தன்மையையும் விளக்குவதாக அமைந்துள்ளது.
உரைநடையின் தோற்றமாகச் சிலப்பதிகார உரையிடையிட்ட பாட்டைக் குறிப்பிட்டு, இறையனார் களவியல் உரையைச் சுட்டி இந்நூல் துவங்குகிறது. இடைக்கால உரையாசிரியர்களும், வைணவ உரையாசிரியர்களும் உரைநடை தோற்றத்துக்குக் காரணமாக விளங்குவதை, அவர்களின் உரைகளைக் கொண்டு ஆய்ந்துள்ளது. ஆனந்தரங்கரின் நாட்குறிப்பும் இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உரைநடை வளர்ச்சிக்குக் காரணமாக இக்கால கவிஞர்கள், அறிஞர்கள் (பாரதி. சுத்தானந்த பாரதி, விபுலானந்த அடிகள், மறைமலை அடிகள், தனிநாயகம் அடிகள்..) ஆகியோரது உரைநடை குறித்து ஆராயப்பட்டுள்ளது. நாவல், சிறுகதை முதலியன வளர்ந்த காலகட்டத்தில், தமிழ் உரைநடை உச்சத்தைத் தொட்டது.
இதனை வேதநாயகம் பிள்ளை தொடங்கி, ஜெயமோகன் வரையிலான பல்வேறு படைப்பாளர்களை, அவர்களது படைப்புகள் கொண்டு விளக்கியுள்ளது. பாரதியார், தமிழ் பத்திரிகைகள் தமிழை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்துக் கூறுவதை விளக்கியுள்ளதோடு, புலவர் நன்னன் அவர்கள் கள ஆய்வில் தரக்கூடிய செய்திகளையும் எடுத்துரைக்கின்றது. உரைநடையின் வரலாற்றை, அவ்வக்கால உரைநடை சான்றுகளைக் கொண்டு ஆய்ந்து விளக்கியுள்ளவர் பேராசிரியர் ப.மருதநாயகம்.
தமிழ் உரைநடை: தோற்றம் வளர்ச்சி உச்சம் சரிவு - Product Reviews
No reviews available

