சிலைகள் அல்ல, சிற்பிகள்
சிலைகள் அல்ல, சிற்பிகள்
இந்தப் புதினத்தின் ஆசிரியரான திருமதி. புவனா சந்திரசேகரன், மதுரையைச் சேர்ந்தவர். கணிதத்தில் கோல்ட் மெடலுடன் முதுகலைப்பட்டம் பெற்றவர். பாரத ஸ்டேட் வங்கியில் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். சிறுகதைகள், குறுநாவல்கள், கவிதைகள் மற்றும் புதினங்கள் எழுதிவரும் இவர் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். வரலாற்று நாவல்கள், சமூக நாவல்கள் மற்றும் சிறார் கதைகள் எழுதுகிறார். வார, மாத இதழ்களில் இவருடைய கதைகள் வெளிவந்துள்ளன. பல்வேறு புதினங்கள் அச்சில் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகத்தின் தொடர் ஆதரவுடன் அச்சில் வரும் ஒன்பதாவது நூல் இது.
கதையைப் பற்றி...
சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய காலகட்டத்தில், தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் ஆரம்பிக்கிறது கதை அன்றைய காலகட்டத்தில் பெண்களின் நிலை எப்படி இருந்தது என்பதைக் காட்டுகிறது. அடுத்தடுத்து வரும் தலைமுறைகளில் பெண்களின் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள், பெண் கல்வியின் முக்கியத்துவம், கல்வியால் முன்னேறும் பெண்கள் பற்றிப் பேசப்படுகிறது. பெண்கள் வெறும் சிலைகளாக நிற்கவில்லை. சுரங்களில் உளிகளை ஏந்திக் கொண்டு புதியதொரு சமுதாயத்தைச் செதுக்கும் சிற்பிகளாக உருவெடுத்துவிட்டார்கள் என்று காட்டுகிறது
சிலைகள் அல்ல, சிற்பிகள் - Product Reviews
No reviews available

