செயலிகளின் கதை
செயலிகளின் கதை
வாட்ஸ்அப், நெட்பிளிக்ஸ், சோமாட்டோ, ட்ரூகாலர், டெலிகிராம், டிக்டாக், டீப்சீக் உள்ளிட்ட புகழ்பெற்ற 52 செயலிகளின் (Mobile Apps) வெற்றி வரலாறுகளை இந்நூல் ஆராய்கிறது.
நிறுவனங்களின் அறிக்கைகளைப் பகுப்பாய்ந்து, நிறுவனர்களின் கதைகளை இணையத்தின் மூலைமுடுக்குகளில் தேடி, பல நூறு மணி நேரப் பேட்டிகளைக் கேட்டு, ஒவ்வொரு தகவலையும் சரிபார்த்து எவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சுவையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
இலவச மளிகைப் பொருட்களுக்காகக் காத்திருந்த அகதி எப்படி வாட்ஸ்அப் நிறுவனத்தைத் தொடங்கினார், 48 வயதில் தனது உயர்பதவியைத் துறந்துவிட்டு நைகாவை (Nykaa) ஒரு பெண்மணி எப்படி உருவாக்கினார், தனது 14 வயதிலேயே மென்பொருள் எழுதிச் சம்பாதித்த சிறுவன் (Spotify) எனப் பல வியக்கத்தக்க செய்திகள் இதில் உள்ளன.
இந்தத் தொகுப்பு வெறும் சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்களை மட்டும் பேசாமல், இந்தியா, கசகஸ்தான், இஸ்ரேல், ஆஸ்திரேலியா, உக்ரைன் என உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வந்த வெற்றிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. ஒரு செயலி உருவாகும் சூழல், அதன் நிதி மேலாண்மை மற்றும் அது அசுர வளர்ச்சி அடைந்த முறை ஆகியவற்றை ஆசிரியர் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.
ஒவ்வொரு பயனரும் படிக்க வேண்டிய நூல் இது. இதனைத் துளிர்த்தொழில் (Startup) நிறுவனர்களின் கையேடு என்றும் சொல்லலாம். மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் தொடராக வெளிவந்து ஏராளமான வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
செயலிகளின் கதை - Product Reviews
No reviews available

