ருஸ்தம்கான் சன் ஆஃப் நவகாளி

0 reviews  

Author: சி.முருகன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  450.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ருஸ்தம்கான் சன் ஆஃப் நவகாளி

இந்த நாவலை எழுதுவதன் நோக்கம், கடந்த கால வரலாற்றைக் கிளறி, கல்கத்தா மற்றும் நவகாளிக் கலவரங்களில் இந்துக்கள் அதிகமாகத் தவறு செய்தார்களா. முஸ்லிம்கள் அதிகமாகத் தவறு செய்தார்களா என்று ஆராய்ந்து, ஒரு தரப்பை நியாயப்படுத்துவதோ அல்லது மற்றொரு தரப்பைக் குற்றவாளியாக்குவதோ அல்ல. மாறாக. வங்காளத்தின் கலாச்சாரம். பண்பாடு. நாட்டுப்புறவியல், புவியியல் அழகு ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ள அதன் வரலாற்றைத் தமிழ் வாசகர்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதே எனது முதன்மையான விருப்பம்.
மதங்களிலும் நல்லவர்களும் தீயவர்களும் இருக்கிறார்கள். ஆனால், நல்லிணக்கத்துடன் sung விரும்பும் பெரும்பான்மையான மக்களின் காரணமாகவே, பல்வேறு மோதல்களையும் சச்சரவுகளையும் கடந்து நமது சமூகம் தொடர்ந்து ஒன்றிணைந்து வாழ முடிகிறது.
அந்த மனிதநேயத்தின் அடையாளங்களாகவே இந்த நாவலில் ருஸ்தம் கான், நிலாஞ்சனா ராய் சௌத்ரி, அருண்பாபு, ஹரதன் பாபு, ரமேஷ் பாபு, பிபூதிபூஷண் பாபு, காஜல் கான் உள்ளிட்ட பாத்திரங்களைப் படைத்திருக்கிறேன்.
அதேவேளையில் கல்கத்தா மற்றும் நவகாளிக் கலவரங்களின்போது மதத்தின் பெயரால் நிகழ்ந்த வன்முறைகளில் எந்தக் காரணமும் அறியாமல் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் நினைவுகளையும் இந்த நாவல் சுமந்து நிற்கிறது.

ருஸ்தம்கான் சன் ஆஃப் நவகாளி - Product Reviews


No reviews available