ரோல் மாடல்

0 reviews  

Author: வெ.நிலண்டன்

Category: தன்னம்பிக்கை

Available - Shipped in 5-6 business days

Price:  75.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ரோல் மாடல்

புத்தகங்களைப் படித்து கிடைக்கப் பெறுவது அறிவு; மனிதர்களைப் படிப்பதன்மூலம் கிடைக்கப் பெறுவது அனுபவம். வெறும் அறிவு மட்டுமே வெற்றியைத் தந்துவிடுவதில்லை. அந்த அறிவை எப்படிப் பயன்படுத்தி ஜெயிக்கலாம் என்ற பக்குவத்தை அனுபவமே தருகிறது. * டிஸ்லெக்சியா என்ற கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு, எட்டாம் வகுப்போடு பள்ளியில் இருந்து இடைநின்று, தனித்தேர்வராகவே எல்லாத் தேர்வுகளையும் வென்று, சிவில் சர்வீஸ் தேர்வெழுதி இந்திய வருமானவரித்துறையின் இணை இயக்குனராக உயர்ந்த நந்தகுமார்... * பத்தாம் வகுப்போடு படிப்புக்கு விடைகொடுத்து, செங்கல்சூளையில் கற்களோடு சேர்ந்து தானும் வெந்து, கல்விதான் வாழ்க்கையை உயர்த்தும் என்பதைப் புரிந்துகொண்டபிறகு எடுத்த முயற்சியால், பயிற்றுவிக்கும் கலை பற்றி அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு வகுப்பெடுக்கும் அளவுக்கு உயர்ந்த தாமோதரன்... இப்படி சாதித்துக் காட்டிய 21 தமிழர்களின் வாழ்க்கைக் கதையே இந்த நூல். துயரங்களைத் தாண்டிய கதையை, தங்கள் பாதையை தீர்மானித்த கதையை, தங்களை வெற்றியை நோக்கித் திருப்பிவிட்ட தருணங்களை அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். எல்லோராலும் 21 வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடியாது. ஆனால் இந்த 21 ரோல்மாடல்களின் அனுபவங்களை எடுத்து, தங்கள் வாழ்க்கையை செதுக்கிக்கொள்ள முடியும்! ஐ.ஐ.எம் போன்ற நிர்வாகவியல் கல்லூரிகளில்கூட கிடைக்காத மேலாண்மைப் பாடத்தை இப்படிப்பட்ட மனிதர்களிடமே கற்றுக்கொள்ள முடியும். ‘குங்குமம்’ இதழில் வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களால் ஆராதிக்கப்பட்ட பகுதி, நூல் வடிவம் பெற்று ஆயிரக்கணகான இளைஞர்களுக்கு வழிகாட்டும் புத்தகமாக பெயர் பெற்றிருக்கிறது.

ரோல் மாடல் - Product Reviews


No reviews available